உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் 8 –

L

மு

னிச் சாண்ட்விச் தீவுகளிலுள்ளோர் ஆண்டுள்ள எரிமலைகளாற்றாம் நுகருந்துன்பங்களை நி னைந்து அவ்வெரிமலைகட்கு அதி தெய்வமொன்றுளதென்றும், அஃதெவற்றினும் பெரிதான மான்மிய முடையதென்றும் உரைத்து அதனை உபாசிக்கின்றார். விக்கிரகங்கள், ஆலயங்கள், அரசன், அவன்பெயர், குருமார், அரசன் குரு, இவர்களுடைய சுதந்திரப்பொருள்கள், ஓர் விக்கிரகத்தின்கட் பத்தியுடையரான அடியவர் இவரெல்லாம் டபு என்னும் பரிசுத்தமுடைய ரென்று சொல்லுகின்றார். வேள்வியிற் றேவர்க்கு அவியாகக் கொடுக்கப்பட்ட பன்றி கோழி ஆமை முதலியவற்றின் இறைச்சியும் தேங்காய்களும் பெண் மக்களுண்ணப்படா வென்று விலக்கியிருக்கின்றார். வேனின் முதலான சிலபருவங்களும் அவர்களாற் பரிசுத்த முடையன வென்று கொள்ளப்படுதலால், ஐந்து முதல் நாற்பது நாள் அப்பருவங்கழியுந்துணையும் அவர் ஒன்றுஞ் செய்வதில்லை, எல்லா நெருப்பும் விளக்கும் அவிக்கப்படுதல் வேண்டும், படகுகள் நீரிற் செலுத்தப்படா, யாருந்தலைமுழுகல் கூடாது; ஆலயத்திற் பூசிப்போ ரொழிய மற்றையோர் வெளிவரக் கூடாது; நாய்குரைக்கக் கூடாது, பன்றி உருமப்படாது; சேவல்கூவுதல் கூடாது. அக்காலத்திற் பன்றி நாய் முதலிய வற்றினுடைய வாய்கள் கட்டப்படுகின்றன. அரசருங் குருமாரும் எதனையுந் தொடுதல் கூடாது. பிறரால் அவர் உணவு ஊட்டப்படுவர். இந்நியதி பிழைத்துச் செய்வோனுக்கு மரணதண்டனை விதிக்கின்றார்கள்.

இனி இவ்வாஸ்திரேலியாக் கண்டத்திலுள்ள பிஜிறர் என்னு மற்றோர் சாதியார் மறுமையுண்டென்றும், அது மனி னி தருக்கே யன்றி மிருகங்கள், புற்பூண்டுகள், வீடுகள், கருவிகள், படகுகள் முதலிய வெல்லாவற்றிற்கு முளதென்றுங் கூறினார். மனிதருக்கு இருவேறாவிகள் உளவெனவும், அவற்றுள் ஒன்றான அவன் நிழல் ஏட்ஸ் என்னுமிடத் திற்குப்போவதெனவும், நீரிற்றோன்றும் பிரதிபலன் மற்றோர் உருவம் அவனிறக்குமிடத்தேவசிப்ப தெனவுமுரைத்தார். அவர்கள் பகைவரை வெல்வதெல்லாம் நரமாமிச பக்ஷண விருப்புடைய அவர் தெய்வத்திற்கு நரபலியிடுதலான் மாத்திரம் வருமென்று அவர்குருமார் வற்புறுத்திக் கூறுதலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/165&oldid=1574581" இலிருந்து மீள்விக்கப்பட்டது