உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

141

இந்தச்சாதியார்மாட்டு நரபலி விசேடமாய் நிகழ்ந்தது. அவர்களிற் றலைவராவார் தம் மனைவியரை வெட்டிப் பலியிட்டனர். அவர்களுக்கு அச்சத்தை விளைப்பன வெல்லாம் தெய்வங்களாக வழிபடப்பட்டன. அவர்களுடைய தெய்வங் களில் ஒன்றுக்கு எட்டுப்புயங்களும் ஒன்றுக்கு எட்டு விழிகளும், ஒன்றுக்கு எண்பது வயிறுகளும் உண்டு. இவர் திறம் இன்னும் விரிப்பிற் பெருகும்.

இனிப்புதுக்கினியாவில் டோரி என்னுமூரிலுள்ள பாபுவர் என்போர் ஒவ்வொரு வீட்டினுள்ளிருப்பதாயும், ஒழுங்கின்றிச் செதுக்கப்பட்டதாயும், பதினெட்டடி உயரமுள்ளதாயுமுள்ள கார்வர் என்னும் விக்கிரகத்தை ஆராதித்து வருகின்றார். அவ்விக்கிரகத்தினெதிரே சப்பாணி கொட்டியிருந்துந் தலைமேற்கைகுவித்துந் திரும்பத்திரும்ப வணங்கியுந் தங்குறைகளை அச்சமயங்களிற் சொல்லிக் கொண்டும் ஒழுங்காய் அதனை வழிபடுகின்றார்கள். குழந்தைகள் பிறக்கும்போதும், மணஞ்செய்யும்போதும், சாக்காடு நிகழ்ந்த விடத்தும் அவ்விக்கிரகம் வந்திருத்தல் வேண்டுமென நினைக்கின்றார்கள். பீடிஷ் என்று சொல்லப் படுவனவாகிய செதுக்குப் பிரதிமைகள் பலவைத்திரு க் கின்றார்கள். அவைகள் பெரும்பாலும் ஊர்வனவற்றின் வடிவங்களேயாம்.

அத

இனிப்போர்னியோ தீவுகளிலுள்ளோர் பிரதான மாகக் கொண்டு வழிபாடியற்றுங் கடவுள் பவா என்னும் பெயரினதாம். இச்சாதியார் முன்னொருகாலத்து ஜாவான் என்னும் சாதியாரோடு சம்பந்தமுடையராயிருந்தாரென்பது இவர் தெய்வங்களின் பெயரானும் வழக்கவொழுக்கங் களானும் இனிது துணியப்படும். இவர்கள் எண்ணில்லாத பிசாசங்களை வழிபடுகின்றனர். அவைநல்லனவென்றுந் தீயனவென்றும் பகுக்கப்பட்டிருக்கின்றன, அவர்களிடும் அடியுறையிற் பெரும்பாகம் தீயவற்றிற்குச் செல்கின்றன வாம், நோய், துரதிர்ஷ்டம், சாக்காடு முதலியனவெல்லாம் இவைகளா லுண்டாகின்றனவென்றுஞ் சொல்லுகின்றார். சிலபருவங்களிற் பிசாசங்களோடு இரகசியமாய்ச் சம்பாஷிக்கும் பொருட்டுக் காடுகளுக்குச் செல்லுகின்றார்.

·

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/166&oldid=1574582" இலிருந்து மீள்விக்கப்பட்டது