உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

  • மறைமலையம் 8 – 8

இவர்கள் வழிபடும் போர்த்தெய்வங்கள் கொடுந்தோற்றமுங் குரங்குபோற் சிவந்த உரோமமுள்ளனவென்று கூறாநிற்பர்.

னி

இனி மலகசி என்போர் ஒவ்வொரு குடும்பத்தினும் வேறுவேறாம் விக்கிரகங்கள் பலவுடையர். அவைகளிற் பெரும்பாலன மானுடவடிவமும், சிறுபாலன வடிவமில்லாத முழுமுதற் பிண்டங்களுமாம். பாம்புகள் கடவுளரான் நியாமகஞ் செய்யப்பட்ட தலைவரென அவற்றை மிகவிநய மாய் வணங்குகின்றார்கள். முதலையையும் அவ்வாறே மடமையாற் பத்திசெய்கின்றார்கள். இறந்தவர்கட்குப் பலிதரும் வேள்வித்திண்ணைகள் மலைகளின் மேற் காணப் படுகின்றன.

இதுவரையில் ஆஸ்திரேலியாக்கண்டத்தார் சமய வரலாறு ஒருவாறு சொல்லப்பட்டது. இனி ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ளோர் சமயப்பெற்றிமையும் ஒரு சிறிது

காட்டுவாம்.

ஆட்டண்டாட் என்னுஞ் சாதியார் கடவுளொருவ ருண் ருண்டெ ன்றும், அதன்பெயர் ஈட்ஜிபிப் என்பதாமென்றும், அஃதிறந்தோர் புதைகுழிதோறும் வசிக்கின்றதென்றும் உரைக்கின்றார். அவர்களுள் ஒருவர் புதைகுழியின் பக்கத்தே செல்லும்போது அதன் மேல் தம்பத்திமைதோன்றக் கல், செடி முதலியவற்றுளொன்றை எறிந்து தம்மை இரட்சிக்கும் படி பிரார்த்திருக்கின்றார்கள்.

இனித்தமராஸ் எனப்படுவோர் பூர்வகாலத்தின் தொடக்கத்திலே ஒருமரம் இருந்ததென்றும், அதிலிருந்து தமராஸ், ஆடுமாடுகள் முதலானவெல்லாம் உற்பத்தியாயின வன்றும் கூறி மரங்களைப் பயபத்தியோடு பாராட்டு கின்றார்கள். இறந்தோர் ஆன்மாக்கள் தம்மியற்கைவடிவம் ஒழித்து நாய்வடிவத்தோடு வருகின்றனவென்று சொல்லு கின்றார்கள்.

பிகுவானஸ் என்போர் மரத்தானுங் களிமண்ணானுஞ் செய்யப்பட்ட விக்கிரகங்களை வழிபட்டு அதனாற் றமக்குத் தெய்வத்தன்மை சித்திப்பதாகவுரைக்கின்றார். இனிக் காப்பிரிகளென்போர் முதன்முதலுள்ளோன் ஒருவனுள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/167&oldid=1574583" இலிருந்து மீள்விக்கப்பட்டது