உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

143

னென்றும் அவன் பெரியதிற் பெரியோன் என்றும் உரையா நிற்பர். தம்முன்னோர் ஆன்மாக்கள் பாம்புடன் கலக்கின்றன வென்றுரைத்து அவற்றைப்பெரிது போற்றுகின்றார்கள். செல்வப்பெருக்கமுற்று வாழ்வ தெல்லாந் தம்முன்னோர் அருளால் வருகின்றன, வறுமையுறுதலெல்லாம் அவர் கோபத்தினால் வருகின்றனவென்றும், தம்வழிவருவோரை யெல்லாம் அவர் பாதுகாத்து நிற்கின்றனரென்றுங் கருதி அவர்க்கு மிருகங்களைப்பலியிடுகின்றார்கள்.

னி

க்

இனி ஆப்பிரிக்காவின் கீழ்ப்பாகங்களிலுள்ளோர் மேலான பொருள் ஒன்றுளது, அதன்பெயர் முலுங்கு என்பதாம். அஃது இடி, விண், நோய்செய்வது என்பனவாக விவரிக்கப்படுகின்றது என்று கூறுகின்றார். தம்முடைய உறவினர், நண்பர், ஆடுமாடுகள் முதலியவற்றை கொல்லுதலால் அந்தப் பழிக்குப் பழிவாங்க அக்கடவுளைக் காணுதல் வேண்டுமென விரும்புகின்றார். இறந்தோர் ஆன்மாக்கள் தமக்குக் கனவில் விளங்கித் தோன்றுகின்றன, அவற்றுள் நல்லன மருந்து, கள், உணா முதலியன கொடுத் தலாற்சாந்தமடைகின்றனவென்று கூறுகின்றார்.

இனிப் பாலண்டா சாதியார் ஒரு கொம்பில் மனிதர் தலையைக் கட்டித் தூக்கியும், கல்லானுங் களிமண்ணினானு மியற்றப்பட்ட சிங்கம், முதலைமுதலியவற்றின் வடிவங்கள மைத்தும் அவற்றைவழிபடுகின்றார். இவற்றிற்குப் பலியிடுத லால் வருங்கால உணர்ச்சி உண்டாமென்று நினைக்கின்றார். இனி இக்கண்டத்தின் மேற்பாகங்களிலுள்ள கிரோவர் காற்றுக்குப் பிட்டிஷ் என்னும் ஓர் உருவும், இடிக்கொன்றும், ஆற்றுமீன் கடல்மீன்கட்கு ஒவ்வொன்றும், காலில் முள்தையாதிருக்க ஓர் உருவும், காட்டுமிருகங்கள் தீது செய்யாதிருக்கவென்று ஓர் உருவும், அசௌக்கியம் வராதிருக்கவொன்றும், நல்லதிஷ்டத்திற்கொன்றும், கண்கள் தெளிவாயிருக்கவுங் கால்கள் வலிவாயிருக்கவும் நயமாய் விலைப்பொருள்கொள்ளவும் ஒவ்வொன்றும் வைத்து வழிபடுகின்றார்கள். ஒருவன் எதாவதோர் குற்றஞ்செய்தல் வேண்டினானாயின் தான்வழிபடும் பீட்டிஷ் உருவத்தை மூடிவைத்து அஃதறியாதென் றெண்ணிச் செய்கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/168&oldid=1574584" இலிருந்து மீள்விக்கப்பட்டது