உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் லயம் – 8

அவ்வுருவம் மனித வடிவத்தை யாதல் மற்றைப்பிராணிகளின் வடிவத்தையாதல் குறிக்க வேண்டுமென்னும் நியதியில்லை. சாதாரண ஓர் உருச் சிவந்ததுணியாற் சுருட்டிச் செய்யப்பட்டதாயிருக்கும். கிராமங்களிலிருக்கும் உருக்கள்,

உடம்

ம்பெல்லாம் இரும்புத் துண்டுகள் பறவைச் சிறகுகள் பழங்கந்தைகள் முதலியன ஒட்டிச் செய்யப்பட்ட மனித வடிவங்களாம். அவற்றுட் சில எருமைமயிர் அழுக்கேறிய கந்தைகள் முறுக்கிய வளார்களானுஞ் செய்யப்படுகின்றன.

இன்னும் அம்மேற்பாகங்கள் சிலவற்றில் இம்புரி என்னுந் தெய்வோபாசனையானது காணப்படுகின்றது. ஒருமரம் ஆறுமுதலியனவும் அப்பெயர்பெறாநிற்கும். ஒவ்வோர் ஆடவரும் பெண்டிரும் ஒவ்வோர் இம்புரி உருக்கள் வைத்திருப்பர். கெட்டகாலம், நோய், அபாயம் நிகழுங்காலங்களில் அவைகட்குப் பலியிடுகின்றார்கள். இந்த உருக்கள் வைக்கப்பட்டிருக்குங் குடில்களில் நுழைந்தால் ஆண்டுமானுடவடிவமாக வைக்கப்பட்ட ஓர் உருவும், அதனெதிரே நிலத்திலூன்றிய பிசின்றீவர்த்தியும் காணக் கிடக்கும்.

சமயப்பொறுமை

சோ

சிவஞான

திருவனந்த புரத்தில் ஸ்ரீவள்ளல் தேசிகரவர்களாற் பிரசுடனஞ் செய்யப்படும் அறிவுவிளக்கப் பத்திரம் 1901-ஆம் வருடம் மார்ச்சு மாதம் 10 தேதி வெளிவந்த சஞ்சிகைமுதல் அக்டோபர் மாதம் பிரசுரமான சஞ்சிகை ஈறாக இடைக்கிடந்தவற்றுள் ஒருநண்பர் மதக்ஷமை அல்லது சமயப்பொறுமை என்னும் விடயத்தை விரித்துரைக்கப் புகுந்து, ஒருசில நன்கெடுத் துரைத்து ஒருசில நன்காராய்ந் துரைக்கு மதுகையின்மையின் வேண்டியவாறே கூறித் தருக்கம் நெகிழ மொழிந்து முடித்திட்டார். இப்பரத கண்ட நன்னாட்டை யொழித்து ஒழிந்த கண்டங்களினுள்ள மக்களெல்லாருந் தம்முட் பலவேறுபட நிகழுஞ் சமயப் பொருள்பற்றித் தம்முண் முரண்பாடு பெரிதுற்றுப் போரியற்றி மலைந்து கணக்கின்றி யிறந்துபட்டாரெனவும் நமது பரதகண்டத்திலுள்ள நன் மக்கள் பலவேறுபட நிகழுஞ் சமயப்பொருள் பற்றிப் பிணங்காது பொறுமை மேற்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/169&oldid=1574585" இலிருந்து மீள்விக்கப்பட்டது