உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

145

டொழுகினமையால் அங்ஙனஞ் சமயப்போர் விசேடமாய் நிகழ்தலின்றாயிற் றெனவுங் கூறிச்சரிதங் காட்டித் தம்மேற் கோள் நிறுத்து வாராயினார். இனியிப்பரத கண்டத்தின் கண்ணும் பொறுமையின்றி மலைந்து மற்றைச் சமயிகளைக் குரூரமாய்க் கொல்வித்த ஒரோவொரு ரு சம்பவங்கள் நிகழ்ந்தன வென்றுரைத்து, அவ்வுரைப் பொருளை நிறுத்தற் பொருட்டுப் “பாலறாவாய ரென்னும் பிள்ளைத் திருநாமம் பெற்ற ஞானசம்பந்தப் பெருமான் தன்னால் ஜெயிக்கப்பட்ட சமணரை ஒருங்கே கழுவேற்று வித்த லோரதிபாதகச் செய்கை யன்றோ. சமணரிற் சிலர் துஷ்டர்க ளென்றாலும் க்குரூர தண்டனையை ஒருங்கே அனைவருக்குங் கூறல் அவர்தம் பெருமைக்கழகோ, ஞானசம்பந்தர் சைவசமயமே சமயமென ஸ்தாபிக்க மிக உழைத்தாரென்பதும் அவர் தமிழ் வல்லாரென்பதும் மிக்கசொல்வன்மை மனவன்மைகள் உ டை டயா ரென்பதும் ஐயுறக் கிடந்ததன்றாயினும் ஜீவகாருண்ய மின்றித் தம்போலிய ஜீவராசிகளை உயிர்துறக்கச் செய்தல் அவர்தம் பேராற்றலுக் கோரிழுக் கன்றோ;" எனமுன்னொடுபின் மலையுமாறு தமக்குத் தோன்றியவாறே குழறினார். இனி இங்ஙனங் கூறிய விவருரை பொருத்தமின்றிக் குழறு படையாய் முடிதல் ஒருசிறிது காட்டுவாம்.

சாற்கேட்டதுணையானே

ஞானசம்பந்தப்பெருமான் சமணரெய்திய தண்டனை யிற் சம்பந்த முறுதல் பற்றியே அவர்க்குத் தோடாரோபணஞ் செய்தல் நியாயவுணர்ச்சி கொளமாட்டாதார் முறையாம். என்னை? கொலைஎன்னுஞ் சொற்கேட்ட கொலை தீ தென்றலும் வருத்தமென்னுஞ் சொற்கேட்ட துணையானே வருத்தந் தீதென்றலும் அமையா, மற்றவை நல்லவாமாறும் உண்டாகலானும், அங்ஙனங் கொள்ளாக் கால் ஒருவேந்தன் குற்றஞ் செய்தோ னொருவனைத் தூக்கிடுதலும் ஒருவனை வருத்தி ஒறுத்தலும் போல்வன வெல்லாம் நடுவின்றாய்ப் பிறழ்ந்துபடுமாகலானுமென்பது. அற்றன்று, ஒருவேந்தன் குற்றஞ்செய்தோரையே அங்ஙனம் ஒறுக்கக் காண்டுமாகலான் அதுபற்றி யவற்கு வரக்கடவ தோரிழுக்கில்லை, மற்று ஞானசம்பந்தர் தஞ்சமயந்தழாது அவர் பிணங்குமாறே பற்றிச் சமணரைக் கழுவேற்றுவித்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/170&oldid=1574586" இலிருந்து மீள்விக்கப்பட்டது