உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

  • மறைமலையம் 8 – 8

நியாயமாமாறுயாங்ஙனமெனின் அறியாதுகடாபினாய், ஞானசம்பந்தர் தாம் பிரசாரகஞ்செய்து போந்த சைவ சமயத்தை அவர் தழாமை பற்றியவரைக்கழு வேற்று வித்தாரெனலடாது, தஞ்சமயஞ் சார்ந்து நிற்கும் பெரியோரை அச்சமணர் பெரிதும் நலிந்து அவர்க்கெல்லாம் பெருந் தீங்கிழைத்தமையானே அவ்வாறு ஒறுப்பித்தார். கொல்லா விரதம் பூண்டொழுகின சமணர் அங்ஙனம் பிறர்க்குத் தீதுசெய்வரோவெனின்; செய்தாரென்பதை நிறுவுதற்குச் சகளோபாசனையில் யாமுரைத்த ஓர் பகுதியை

யீண்டெடுத்துக் காட்டுவாம்.

அக்காலத்திற்

சமணசமயிகள்யாண்டும்

விருத்தி யடைந்து வந்தனர். அச்சமணசமயிகள் கொல்லாமை முதற் சிறந்த இலெளகிகதருமங்களைப் பிறழா மனவெழுச்சியுடன் அனுட்டித்து அச்சிறந்த தரும மேம்பாட்டைச் சாதாரண சனங்கட்கு உபந்நியசித்து அவர்க்கெல்லாம் உள்ளக்கவர்ச்சியை எழுப்பி அவ்வாற்றாலவரைத் தம்மதத்திற்குத் திருப்பிக்கொண்டு செல்வாராயினர். இங்ஙனஞ் சிலநாளெல்லாஞ் செல்ல அச்சமணசமயம் யாண்டும்பரந்து விரிவதாயிற்று. தஞ்சமயம் இவ்வாறு விருத்தியடையவே மற்றைச் சமயங்களை அனுசரித் தொழுகுவோர் தொகைசுருங்குவதாயிற்று. சமணம் பௌத்தம் முதலிய அச்சமயங்களையொழித்து ஒழிந்த சைவம், வைரவம், பாசுபதம், சாத்தேயம், சாத்தேயம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய சமயங்களெல்லாம் தய்வம் ஒன்றுண்டெனக் கொண்டுவழிபடும் ஆத்திகசமயங்களாம். சமணம் பௌத்தம் என்பனவோ இளெகிகதருமங் களிற்சிறந்தனசில அனுட்டித்து ஒழுகும் அம்மாத்திரையே யல்லது, அவை தெய்வம் ஒன்று உண்டெனக்கொண்டு வழிபடும் ஆத்திகசமயங்களல்லவாம். மற்று அவைதெய்வ மில்லென்று உரைக்கும் நாத்திகசமயங் களேயாம். இவ்வுண்மை தேறமாட்டாத ஆங்கிலதத்துவ சாத்திரிகள் சிலர் கௌதமர் ஈசுரவழிபாட்டைக் குறிப்பிட் டாயினும், ஈசுரனைக் குறிப்பிட்டாயினும் யாதும் உரையாமை பற்றி அவரை நாத்திகரெனக் கூறுதலமையாது, அவர் ஆத்திகருமாகலான் என்று உரைத்து இழுக்குறுகின்றார். பண்டிதர் மாக்ஸ்மூலர் "பௌத்தமுனி ஆன்மாவையும் பரமான்வையும் மறுத்துரைக் மறுத்துரைக் குஞ் சுதந்திரநிலையைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/171&oldid=1574587" இலிருந்து மீள்விக்கப்பட்டது