உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

ஞானசாகரம்

6

147

சாங்கியநூலார் தந்திட்டார்.”எனவும் “பௌத்தசமய நூல்கள் பலவும் நிரீசுரவாதம் நிலையிட் டுரைப்பனவாம்” எனவும் கூறுதலானும், பிராஞ்சு தேயத்துத்தத்துவ சாத்திர விற்பன்ன ராகிய டாக்டர் பார்த் என்பவர் "பௌத்த குருவின் கோட்பாடுஒருதலையாக நிரீசுரவாதம் போதிப்பதுவாம்’ எனத்துணிவு தோன்றக் காட்டுதலானும், பிரபலவாராய்ச்சி செய்து வடமொழி நூலுரை வரலாறு புதுவதாக எழுதி வெளியிட்ட மாக்டனல் பண்டிதரும் ‘பௌத்தமும் சமணமும் சாங்கிய நூலைப் போலவே ஈசுரனிருப்பை நிராகரிக்குங் கோட்பாடுடையவாம்" என்று அங்ஙனமேதுணிபு. ஒருப்படுத்த லானும், சிவஞான போதம் சிவஞானசித்தியார் முதலிய தத்துவமுழுமுதற்றமிழ் நூலுரைகளின் கண்ணும் அவ்வாறே அவர் நாத்திகசமயி களென்று வைத்து மறுக்கப்படுதலானும் பௌத்தரும் சமணருமாகிய அவ்விருவகைச்சமயிகளும் நாத்திக சமயிகளேயாமென்பது ஒருதலையென்றுணர்க. இங்ஙனம் நிரீசுரவாத மேற்கொண்டு ஒழுகுவாராகிய சமணசமயிகள் ஈசுரனை உண்மையன்பான் வழிபடும் ஏனை ஆத்திக சமயிகளைக்காண்டொறும் மனஞ்சிறிதும் பொறாராகி மற்று அவரையெல்லாந் தஞ்சமயத்தின்கட் படுக்கும் நோக்கம் பெரிதுடையராயினார். அந்நோக்கம் முதிரவே கொல்லாமை, பொய்யாமைமுதலாகத் தாமனுட்டித்துப் போந்த சில லௌகிக தருமவரம்புகடந்து, தீயமார்க்கத்தா னெல்லாம் ஏனை ஆத்திக சமயிகளை வருத்தத்தொடங்கினார். தன் கட்டளையாற் சட்ட திட்டங்களேற்படுத்தி அவற்றிற்கேற்ப ஒழுகுவார்க்கு நன்மையும், அவற்றிற்கு ஏலாதன செய்தொழுகு வார்க்குத் தண்டனையுந்தந்து நெறிப்படுத்துவானாகிய அரசனையில்லாத குடிகள் தாந்தாம் விரும்பியவாறே சில சட்டதிட்டங்களேற்படுத்திக்கோடலும், தமக்கு ணங்காத வேறு காலங்களில் தம் முன்னை விதிகளை மனம்போனவாறு புரட்டி வேறுவேறு இயற்றிக்கொண்டு தம்முட் கலகம் கலகம் விளைத்தலும் நிகழக்காண்கின்றோம். இதுபோல, ஈசுரனொருவன் உண்டெனக்கொண்டு அவன் கட்டளையிட்டருளிய நற்கருமங்களைச்செய்யின் நன்றாம். அவன் வேண்டாவென்று விலக்கிய தீக்கருமங்களைச் செய்யின் தீதாம் என்னும் மனவுறைப்பில்லாத நாத்திக

அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/172&oldid=1574588" இலிருந்து மீள்விக்கப்பட்டது