உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

❖ LDMMLDMOED - 8

மறைமலையம் லயம் –

சமயிகள் தாம் ஒரோவொருகாலங்களிற் சில இலௌகிக தருமங்களை நெறி பிறழாது அனுட்டிக்க உடன்படுவா ராயினும், தமக்கு அத்தருமங்களியையாத பிறகாலங்களில் தாந்தாம் விரும்பியவாறே முன்னைத்தரும வரம்பழித்துத்தீய கருமங்கள் நிகழத்துந்துணிவுடையாராவர். இங்ஙனமே, சமணசமயிகள் அக்காலத்துத் தம்மோடு ஒருங்கு இருந்த சைவர், வைரவர், பாசுபதர் முதலிய ஆத்திகவைதிக சமயிகளுக்குப்பெருந்தீது செய்யும் வஞ்சனை பலவுடை ராயினார். திருநாவுக்கரசு சுவாமிகள் சமணசமயந் துறந்து சைவசமயந்தழுவியகாலத்திற்கு சமண ரொருங்கு கூடித்தம் மரசனால் அவரை நீற்றறையில் இடுவித்தும், கல்லிற்கட்டிக் கடலில் வீழ்த்தியும், யானைக்காலில் இடறுவித்தும், நஞ்சம் ண்பித்தும் புரிந்த தீதுகள் நம்மேற்கோளை இனிது நிறுத்தும் பிரமாணங்களாமன்றோ; சாந்தகுணத்திற்கு ஓர் உறையுளாய் விளங்கிய அப்பமூர்த்திகள் தாம் சமணராற் பட்ட கட்டங்களைத் தாமே தந்திருப்பதிகங் களிலாங்காங்குக் குறிப்பிடுமாறுங்காண்க. இவ்வாறே, அவர்கள் தங்காலத் திருந்த பாண்டியனை யுள்ளிட்ட முடிவேந்தர்களையெல்லாந் தஞ் சமயங்களிற்றிருப்பி, அவ்வரசர் செல்வாக்கால் ஏனை ஆத்திகசமயிகள் வழிபடுந்தேவாலயங்களை அடைப்பித்தும், மடாலயங்களில் தீக்கொளுவியும், அவரைக்கண்டால் 'கண்டுமுட்டு' என்றும் அவரைக்குறித்து ஏதேனுங் கேட்டால் 'கேட்டுமுட்டு' என்றும் பலவாறு இன்னலியற்றிவந்தனர். இங்ஙனஞ்செய்து போந்த சமணர்கள் கொல்லாமை முதற்சிறந்த தருமங்களை மேற்கொண்டு ஒழுகினாரெனல் யாங்ஙனம்? ஆகவே, வ்வாறெல்லாந்தீது புரியும்

ஒழுகலாறுடையரான சமணர்யாண்டும் பரவிநிரம்புதலும், சைவசமயிகள் தீயினால் வளைக்கப்பட்டு இடையிற்கிடந்து துடிக்கும் புழுப்போற் பெரியதோர் இடருழவாநின்றார்

இஃது இங்ஙனம் நிற்க. இனிப்பிள்ளையார் அப்பர் சுவாமிகளோடு வேதாரணியதலத்தில் எழுந்தருளியிருந்த போது மதுரைமாநகரத்திற் சமணருடைய போதனையாற் சைவசமயம் வழீஇச் சமணமதந்தழீஇய தம் புருடரான பாண்டிய அரசனை யுள்ளிட்டுப் பிரசைக ளெல்லாரையுந் திரும்பச் சைவராக்குதல்வேண்டி மங்கையர்க்கரசி என்னும்

ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/173&oldid=1574589" இலிருந்து மீள்விக்கப்பட்டது