உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

ஞானசாகரம்

பாண்டிமாதேவியார் பிள்ளையாருக்குத்

.

149

திருமுகம்

விடுத்தார். அது கண்ட பிள்ளையாருந் தந்திருக்கூட்டத் தாடு மதுரைமாநகர்க்கு எழுந்தருளப் பாண்டிய வரசன் மந்திரியாராகிய குலச்சிறை என்பார் அவரை எதிர்கொண் டழைத்துச்சென்று பிள்ளையாரைத் திருக்கூட்டத்தொடும் ஒருமடத்தில் எழுந்தருளியிருக்கச் செய்தார். இதனையறிந்த சமணகுருக்களெல்லாருந் தெய்வப்பெற்றியுடைய இப் பிள்ளையாரால் நமதுசமயம் அழிந்துபடும் எனப்பெரிதும் அஞ்சிப் பிள்ளையாரைத் திருக்கூட்டத்தோடுங் கொலை செய்ய எண்ணினார். அந்தோ! அந்தோ! இதுதானோ கால்லாவிரதியரான சமணருக்கு விரதமாவது! அன்பர்களே! சிறிது ஆழ்ந்து சிந்தித்திடுங்கள்! இங்ஙனம் கருதிய அக்குருக்கண்மாரெல்லாந் தம்முள் துணிபு ஒருப்பாடு உடையராய்க் கூன்பாண்டியனிடஞ்சென்று அவனுக்குத் தம்மெண்ணம் புலப்படுத்துக் கரவுரை பலவால் அவனைத் தந்தொழிற்கு இயைவித்துக்கொண்டனர். பின் அன்று இரவு நள்யாமத்திற் பிள்ளையார் திருக்கூட்டத்துடன் பள்ளி கொண்டிருக்கும் ம் அமயங்கண்டு அச்சமணப்படுவர் எரிகொள்ளிகொண்டு மடத்தில் தீக்கொளுவினார். அந்தோ! அந்தோ! தீப்பற்றி மடம் எரிகின்றகாலத்தில் மடாலயத் தினுள்ளிருந்த அடியார்களெல்லாரும் மருண்டெழுந்து ஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு விண்ணப்பித்து அடைக்கலம்புகுந்து சிவத்தியானஞ் செய்துகொண்டிருந்தார். இதனை உணர்ந்த பிள்ளையார் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைக்க முந்துற்றுத் தீக்கொளுவிய சமணப்படுவர் பாருந்தாச் செய்கையைக் குறிப்பானறிந்து, இதற்குக் காரணமாயினான் பாண்டிய வரசனேயாமென்பதும் இனிது தெளிந்து,

“செய்யனேதிருவாலவாய்மேவிய

ஐயனேயஞ்சலென்றருள் செய்யெனைப் பொய்யராம மணர்கொளுவுஞ்சுடர் பையவேசென்று பாண்டியற்காகவே "

என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளி மடாலயத்திற் கொளுவிய தீப்பிழம்பு அத்தனையும் பாண்டியன் றேகத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/174&oldid=1574590" இலிருந்து மீள்விக்கப்பட்டது