உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

– 8

மறைமலையம் 8

சென்று பற்றுகவென்று ஏவினார். ஏவுதலும், உருவமாகத் தோன்றிய தீப்பிழம்பு முழுவதும் அருவச் சுரநோயாய்ப் L பாண்டியனைப் பற்றிக்கொண்டது. உடனே, பாண்டியன் அந்நோய் பொறுக்கமாட்டானாய்ச் சமணக்குருமார்களை அழைப்பித்து அவர் தம் மந்திரவிச்சைகளானும் ஒளடத முறைகளானும் செய்வித்துக்கொண்ட பரிகாரங்கள் ஒருசிறிதும் பலியாமைகண்டு மிகவருந்தித் தம் மனையுரிமைக் கிழத்தி யாராகிய மங்கை யர்க்கரசியாரைத் தன்மாட்டு வருவித்து அவர்க்கு இதனைத் தெரிவித்தான். அரசியாரும் உடன்வருந்தித் தங்குறிப்பு நிறைவேறுங் காலமிதுவென்று எண்ணித் தங்கொழுநனை நோக்கிப் "பிள்ளைப்பருவத்தே உமை திருமுலைப்பாலுண்டு ஞானசம்பந்தமூர்த்தியாய்த் தந்திருக் கூட்டத்தோடு இந்நகரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் ங்கு எழுந்தருளினால் இந்நோய் தீரும்.” என்றுரைப்ப அதனைக்கேட்ட அரசனும் அதற்கு உடன் பட்டுத் தம் அமைச்சரான குலச்சிறையாரைப் பிள்ளையாரிடம் போக்கினான். அமைச்சரும் நிகழ்ந்தவெல்லாம் பிள்ளை யாருக்கு விண்ணப்பித்து அவர் பாண்டியனிடத்திற்கு எழுந்தருளச் செய்தார். பிள்ளையார் அருமைத்திருவுருவைக் காண்டலும் பாண்டியன் ஆறுதல் பெரிதுடையனாயினான். வ்வாறு ஞானசம்பந்தப்பெருமானார் பாண்டியனரு மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் பக்கத்தே எழுந்தருளி யிருக்கும் அளவில் ஆண்டுக்குழுமியிருந்த சமணக்குருமார் பிள்ளையாரைச் சுட்டிப் பலவாறு இகழ்ந்து சொல்லிக் குரைத்திட்டார். பக்கத்தேயிருந்து அதனைக்கண்டு பொறாராகிய மங்கையர்க்கரசியார் தங்கணவனைநோ க்கிக் குழந்தையாயிருக்கும் பெருமானை இவர் வ்வாறு

66

கில்

இகழ்வதே" என்று வருந்திக்கூற, அப்போது ஞானசம்பந்தப் பருமானார் அரசியாரைப்பார்த்து,

“மானினேர் விழிமாதராய் வழுதிக்குமாபெருந் தேவிகேள் பானல்வா யொருபாலனீங்கிவனென்று நீபரிவெய்திடே லானைமாமலையாதியாயவிடங்களிற்பலவல்லல்சே

ரீனர்கட் கெளியேனலேன்றிருவாலவாயரனிற்கவே'

என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளினார். இதன்கண் ஞானசம்பந்தப்பிள்ளையார் மங்கையர்க்கரசியாரை நோக்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/175&oldid=1574591" இலிருந்து மீள்விக்கப்பட்டது