உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

151

"பால்மணக்கும் நல்வாயையுடைய பாலன் நானென்று அம்மே! நீவருந்தாதே” என்று உரைத்தருளினாரென்பது பெறப்படு கின்றது.

கூன்

இங்ஙனமெல்லாங் குழந்தைப்பருவத்தினரா யிருந்த பிள்ளையார்க்கும் அவரைச் சார்ந்துநின்ற பல்லாயிரஞ் சிவனடியார்க்கும் பெருந்தீதியற்றிய சமணரை ஒப்பநாடி யத்தகவொறுக்கும் நடுவின்றி யவர்ப்பக்கல்நின்ற பாண்டியன், பின்பிள்ளையார் செய்த அற்புதங்களானே அவர் வஞ்சகந்தேறி அரசுமுறைகோடாது அவரை யொறுத்தல் வேண்டி யங்ஙனங் கழுவேற்றினானாகலின் செங்கோன்முறை வழிப்பட்ட அந்த நியாயதண்டனையைப் பிள்ளையார் மேலேற்றி அவ்வாற்றா லவரை யிகழ்ந் துரைத்தல் பெரியதோர் அபசாரமா மென்றொழிக. மேலேகாட்டிய மெய்வரலாற் றானே தஞ்சமயந்தழாது வேறுநின்றொழுகு வாரை வலிந்து நலிவுசெய்யுநீரார் சமணராவ ரென்பதூஉம், அங்ஙனந்தழாமை பற்றி அவர்மேற் பிணங்கு நீரரல்லர் சைவரென்பதூஉம், இனிது விளங்குமாகலின் அந்நண்பர் நவீனநாகரிக வழிப்பட்டு மெய்யறிவு திறம்பி யுரைத்த மாறுகோளுரை குழறு படையாய் முடிதல்காண்க. ஆங்கிலபாடையில் மகாவித்துவானாய்ப் பிரசித்தியுற்று விளங்கிய பாபிங்டன்மெக்காலே என்பாரும் இப்பெற்றியுணர்ந் தன்றே “குற்றஞ்செய்தோனையாதல் குற்றஞ் செய்தோனாகத் தோன்றுவோனையாதல் அநியாயமாகத்தான் தண்டனை செய்யினும் அது சமய தண்டனையாதல் செல்லாது. மற்று ஒருவன் ஒருசமய நெறிவழி யொழுகுதல் பற்றியாதல் அல்லதவனைச் சார்ந்து நிற்போர் கருத்தோடொட்டி அவன் ஒழுகுதல் பற்றியாதல் அவன் இனியொருகாலத்துக் குற்றஞ் செய்வானென உய்த்துணர்ந்து அவனைத் தண்டித்தல் சமய தண்டனையாம், அதுபெரியதோர் அறியாமையுங் கொடுமை யுமாம்” என்று அதனுண்மையுணர்ந்துரைத்திட்டார். ஆங்கில மொழிவல்ல

L

வ்வாசிரியர் கூறுமாறே சிறிதாராய்ச்சி செய்திடினும் ஆங்கிலமொழிப்பொருள் பற்றிச்சமயப் பொறுமை ஆராய்ச்சி செயப்புகுந்த அந்நண்பர் அதன் பெற்றிதேர்ந் துரைத்திடுவார். அதுதானு முணரமாட்டாமல், தாமெடுத்துக் கொண்ட மதக்ஷமை என்னும் மேற்கோள் கடைப்பிடித் துரையாது விடுத்துத் தாமெடுத்துக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/176&oldid=1574592" இலிருந்து மீள்விக்கப்பட்டது