உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் 8 –

6

""

அத்தெய்வச் செந்தமிழ்மொழி விரிந்துபரந்த நிலவெல்லை பனம்பாரனார் கூறியவாறே நான்காமென்பதும் விளங்க அந்நெட்டிமையா ரென்னு நல்லிசைப்புலவரோ டொருங் கிருந்த காரிகிழார் “நான்மறை முனிவரேந் துகையெதிரே எனவும், “முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே” எனவும், "வடாஅதுபனிபடு நெடுவரை நெடுவரை வடக்குந், வடக்குந், தெனாஅதுரு கெழுகுமரியின் றெற்குங், குணா அதுகரை பொருதொடு கடற்குணங், குடா குடா அதுதொன்று தான்று முதிர் முதிர் பெளவத்தின் குடக்கும்” எனவுங் கூறுதலானுங் கண்டுகொள்க. எனவே, நாற்சாதிவகுப்பு, நாலெல்லைவகுப்பு, நான்மறை வகுப்பு முதலாயினவெல்லாஞ் செந்தமிழ்நிலத்தே பண்டைக் காலத்துத் தமிழ்மக்களாற் செய்யப்பட்டுப் பின்போந்து கலப்புற்ற ஆரியராற்றழுவி வேறுவேறாக அவர்படையினுஞ் செய்துகொள்ளப்பட்டன வென்றறிக. இதுநிற்க.

க்

இனி, ஆரியநால்வகை வருணப்பாகுபாட்டிற்குந் தமிழியற்சாதிவகுப்புக்குந் தம்முள்வேறுபாடுபெரிதுண்டாம். ஆரியர் பிறப்புவகையாற் றமக்கு விழுப்பந்தோற்றுவித்தற் பொருட்டு அங்ஙனம் பாகுபாடியற்றினார். தமிழர் ஒழுக்க 6 வகையான் உலகவியற்கைக் கருமங்களினிது செல்லும் பொருட்டு அவ்வாறு சாதிவகுத்திட்டார். ஆரியர் ஒரு பிராமணனுக்கும் அவன்மனைவிக்கும் பிறப்பவன்றான் பிராமணனென்பர். தமிழர் நான்மறை நெறிவழா தொழுக்க நிகழ்த்தி யுலகிற்குறுதிபயப்பவன்றான் பார்ப்பானென்பர். ஆரியர் இவ்வாறே ஏனை க்ஷத்திரிய வைசிய சூத்திரர்க்குங் கூறாநிற்பர். தமிழர் குறும்புகடிந்து போரியற்றி யரண் காவலமைத்துத் தன்கீழ்வாழ்வார்க்கு ஒருபாற் கோடாது ஒப்பவிருந்து நடுவியற்றி யுலகுபுரந்தருளும் அரசனும் அவ்வரசற்குறுதுணையாயிருந்து போரியற்றுஞ் சுற்றத்தாரும் மறவர் அல்லது க்ஷத்திரியராமெனவும், ஆநிரைகாத்தலுழுது வித்திடுதல் அருமபொருண்மாறுதன் முதலிய வொழுக்கம் நிகழ்த்தி நாடுவளம்படுப்பார் வேளாளர் அல்லது வைசியரா மெனவும், இம்மூவர்க்கும் உறுதுணையாயுடனிருந்து அவர்க்கு வேண்டுவ வறிந்துறுதி சூழுந்து தொழும்பியற்றுவோர் னையோர் அல்லது சூத்திரரெனவுஞ் சொல்லா நிற்பர். இந்நால்வகுப்பாருந் தத்தங்கருமவகையால் வேறுபடுவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/189&oldid=1574607" இலிருந்து மீள்விக்கப்பட்டது