உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

165

T

ராயினும் ஒருமித்திருந்து உறுவதாராய்தற்கண் ஒருவரேயா மென்னுங் கடப் பாடுடையர்; ஆரியவகுப்பாரைப்போல் வேறுவேறிருந்து ஒருமைபோழ்ந்து பேரிடருறூஉம் நீரரல்லர். ன்னுந் தென்றமிழ் நாட்டுச் சிவாலயங்களிற் சிவவழி பாடியற்றும் ஆதிசைவவகுப்பாரே தென்றமிழ்நாட்டுப் பார்ப்பாராவர். இவரின்னராதல் பற்றியே ஆரியமார்த்தப் பிராமணர் இவரைவெறுக்கின்றனர். இவரவரைவெறுப்பா ராயினும் ஆதிசைவத் தமிழ்ப்பார்ப்பார்க்குரிய மேம்பாடு ஒரு சிறிதுங் குறைவுபாடெய்துகின்றிலது. ஆரியமார்த்தப்பிராமணர் தென்றமிழ்நாட்டிற்குரியரன்றாதல் பற்றியும், அவர் சிவ 6 வழிபாடியற்றுதற்குரிய அறிவுமுதிர்ச்சியில்லாமை பற்றியு மன்றே அவரெல்லாந் தமிழச் சிவாலயங்களிற் பூசனை யியற்றுதற்கு இடம்பெறாராயினதூஉம், அவரைச் சிவாகமங் களெல்லாம் ‘அதீக்ஷிதேணவிப்ரேண' என்றொதுக்கியதூஉ மென்க. ஆதிசைவத்தமிழப் பார்ப்பனமக்களைப்போலவே விழுமிய வொழுக்கமுடைய ஏனை நன்மக்களுஞ் சிவவழி பாடியற்றுதற் குரிமையுடையராகலான், வேளாள வகுப்பிற் சிறந்தோர்சிலர் ஆசிரியத்தலைமைபூண்டு போதருகின்றார். இங்ஙனம் கருமங்களை வேறோர்வகுப்பார் செய்தற்கிடம்பெறுதல் ஆரியருளின்றாம். ஆகவே, செந்தமிழ்த்தனி முதன்மக்கள் வகுத்துநிறுத்திய சாதிநெறி ஆரியமக்கள் வகுத்துநிறுத்தியதுபோற் கொடிய தூஉந் தன்னலம்பாராட்டுவதூஉ மன்றாமென்பது கடைப் பிடிக்க.

ஒருவகுப்பார்க்குரிய

சிறந்த

இனி, ஆரியமக்கட்குரிய பண்டைப்பனுவலான இருக்குவேத இறுதிப் புருடசூத்த மந்திரத்திலேயே அந்நால் வகை வருணப்பாகுபாடு காணக்கிடத்தலானும், அவ் விருக்குவேதங் குமரிநாடுகடல் கொள்ளப்படு முன்னெழுந்த தொன்றாதலானும், மேலே நீர்கூறிய வாதங்களெல்லாந் துர்ப்பலமாய் விடும்போலுமெனின்; - அறியாது கடாயினாய், அப்புருட சூத்தமானது “புருடன் ஆயிரஞ்சிரங்களும் ஆயிரம் விழிகளும் ஆயிரம்பாதங்களு முடையனாயிருக்கின்றான்.

இந்நிலவுலகமுழுவதூஉந் தன் வியாபகத்தின்கண்ணே அடக்கி அதனைப் பத்தங்குலப் பரப்பானே மேற்கடந்துசென்றான். இருக்கின்றதும் இருப்பது மாகிய சருவமும் அப்புருடனேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/190&oldid=1574608" இலிருந்து மீள்விக்கப்பட்டது