உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் 8 – 8

அவனே மரணத்தைக் கடந்து அதற்கு

றைவனாய் அமர்ந்திருக்கின்றான், அன்னத்தினாற் பூரிக்கின்றான். அவன்பெருமை இத்தகையது, புருடன் இதற்குமேலானவன் உளவாவனவெல்லாம் அவனிற் காற்கூறாவனவேயாம். அவனில் மற்றை முக்காற்கூறும் ஆகாயத்தில் மரணமின்றி யிருப்பதாம். புருடன் முக்காற் கூற்றுடன் மேலெழுந்து சென்றான். அவனிற்காற்கூறு மறுபடியும் ஈண்டுப்படைக்கப் பட்டது.உண்பனவும் உண்ணாதனவுமாகிய எல்லாப்பொருள் களிலும் அவன் உள்நிறைந்து யாண்டும் விரிந்தான். விராச் அவனிலிருந்து பிறப்பிக்கப்பட்டான், விராசிலிருந்துபுருடன் பிறப்பிக்கப் பட்டான். அங்ஙனம் பிறந்துழி அவன் முன்னும் பின்னுமுள்ள இவ்வுலகத்தின்மேற்சென்று று விரிந்தான், தேவர்கள், புருடனையே பலியாகக்கொண்டு வேள்வி செய்தபோது வசந்தகாலம் நெய்யாகவும் வேனிற்காலம் விறகாகவும் மழைகாலம் அவிசாகவுமிருந்தன. முதற்பிறந்த வனான இப்புருடனை அவர்கள் தருப்பையிற் கிடத்திப் பலியிட்டார்கள். தேவர்களும், சாதியர்களும், இருடிகளு ம் அவனை வேட்பித்தார். அந்தச் சருவயாகத்திலிருந்த தயிரும் நெய்யுஞ் சேகரிக்கப்பட்டன. அவையே நல்லமிருகங்களுந் தீயமிருகங்களுமாயின. அந்தச் சருவயாகத்திலிருந்த இருக்குச் சாமசுலோகங்களும், செய்யுட்களும், பசுவுந் தோன்றின அதிலிருந்து குதிரைகளும் பற்களை இரண்டு வரிசை யிலுமுடைய உயிர்வருக்கங்களுந் தோன்றின. தேவர்கள் புருடனைப் பகிர்ந்த போது, எத்தனை கூறாக அவனை அறுத்தார் அவன் வாய் யாது? புயங்கள்யாவை? எவை அவனுடைய தொடைகளும் பாதங்களுமாகச் சொல்லப் படுகின்றன? எனின்; - பிராமணர் அவன்வாயாவர், (இங்கு ராஜந்யர் என்று சொலப்பட்ட வகுப்பர் தாம் தமிழ ரென்றுணர்க) இராஜந்யர் அவன்புயங்களாக்கப்பட்டார், வைசியர் அவன்தொடைகளாவர், சூத்திரன் அவன் அடியிற்றோன்றினான். அவன் மனத்திலிருந்து திங்களுண் டாயிற்று, ஞாயிறு அவன் விழியிற்றோன்றிற்று, இந்திரனும் அக்நியும் அவன் வாயிற் பிறந்தனர், வாயு அவனுயிர்ப்பில் தோன்றினான், அவனுந்தியிலிருந்து காற்றும், அவன் சிரத்திலிருந்து ஆகாயமும், அவனடியிலிருந்து மண்ணுலகமும், அவன் காதிலிருந்து நான்குதிசைகளுமாக இவ்வாறு உலகங்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/191&oldid=1574609" இலிருந்து மீள்விக்கப்பட்டது