உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

167

களுண்டாயின. யாகஞ்செய்யுந் தேவர்கள் புருடனைப் பலியிடும் பொருட்டுக் கட்டியகாலையில், ஏழுகொம்புகளும் மூவேழுசுல் லிவிறகும் உண்டுசெய்யப்பட்டன. தேவர்கள் வேள்வியால் வேள்விமுடிப்பித்தார். இவைதாம் பூர்வ காலத்துக் கருமங்கள். இந்த வலியகருமங்கள் துறக்க வுலகத்தைத் தருகின்றன, ஆண்டு முன்னைச் சாதியர்கள் தேவர்களா யிருக்கின்றார்" என்று கூறுகின்றது. இம்மந்திர வுரையின் உண்மைதேற வல்லார்க்கு, இவ்விருக்குவேத மேற்பாகங் களெல்லாம் விடியற்காலம், சூரியன், வருணன், மித்திரன், சாவித்திரி, பூஷன், இந்திரன், மருத்துக்கள், வாயு, நிலம், தீ, சோமா முதலான உலகியற் புறப்பொருளுபாசனை நெறிவழாது செல்ல அதன்கீழ்ப் பாகமாய்நின்ற இவ்விறுதிப் புருடசூத்தமந்திரமாத்திரந் தத்துவ நுண்பொருணிறைந் தொழுகு முறைமையானே இம்மந்திர வுரை ஆரியர் செந்தமிழ் மக்களோடொருங்கு கூடிய பிற்காலத்தே எழுதிச் சேர்த்து வைக்கப்பட்டதென்னு மியல்பினிது விளங்காநிற்கும். இவ்வாறே இப்புருட சூத்தமந்திர மானது இருக்குவேதத்தின் மற்றைப்பாகங்களைப்போல் பிற்காலத்தே எழுதிச் சேர்த்து வைக்கப்பட்டதென்னு மியல்பினிது விளங்காநிற்கும். இவ்வாறே இப்புருட சூத்திரமந்திர மானது இருக்குவேதத்தின் மற்றைப்பாகங்களைப் போல் அத்தனை பிராசீனமாவ தன்றென்றும், வடமொழி யுரைநடைச் சுவைபெரிது முதிர்ந்த பிற்காலத்தே எழுதி மொழித்திறம் விளங்கச் சேர்த்துவைக்கப் பட்ட தொன்றென்றும் பண்டிதர் மாக்ஸ்மூலர், கோர்புரூக், வீபர் முதலாயினாருங் கருத்தொருப்பட்டுரையா நின்றார். இன்னும் இதனை விதந்துரைக்கப்புகுதுமாயின் எடுத்த பொருள் பெருகிடுமாதலாலித்துணையினமைந்தாம்; இவ் வுரைப்பொருளிற் பண்டிதர் - சவரிராயர்க்காதல் மற்றை யோர்க்காதல் ஐயுறவுதோன்றுமாயின் அதனைப் பிறிதோர் கால் விரித்துரைத்துப்பொருள் நிறுத்துவாம். எனவே, இப்புருடசூத்தமந்திரவுரையின்கண் நால்வகை காணக்கிடத்தல்பற்றி நாமெடுத்துக் காண்ட மேற்கோள் துர்ப்பலமுறுதல் ஒருசிறிதுஞ் செல்லா தென்றொழிக.

வருணப்பாகுபாடு

ஆரிய

என்றிதுகாறும் உரைமொழிவிரிந்த தருக்கத்தானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/192&oldid=1574610" இலிருந்து மீள்விக்கப்பட்டது