உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் - 8

சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்களிடையிடையே நுழைந் தனவென்னு மெமதுரைபற்றிப் பண்டைத் தமிழ்ப் பனுவ லினெல்லாங் கலவையுண்டாயிற்றென்பது எமக்குமுடன் பாடாமென்னும் ஆப்தரவர்கள் உட்கோள் வழுக்கலுறு மாமென்பதூஉம், அச்சிந்தாமணிக் காப்பியந் தமிழ் முது மக்கள் ஆரியக்காப்பிய விலக்கணம்பற்றி அவ்வழக்குமிகத்

தழீஇநூலியற்றியகாலத்தே எழுதப்பட்டதொன்றாகலின் ண்டுக்கலவையுண்டாதற்கு அவகாச முளதா மென்பதூஉம், ஆரியமக்கள் வழக்குமிக விரவப்பெறாத பண்டைக்காலத்தே தமிழியன் மாட்சிவகுத்துப் பாகுபாடு நனிவிளங்க இயைபு காட்டி அரும்பெறல் நிதியமாய் ஆசிரியர் தொல்காப்பியனார் ஈட்டிவைத்த தொல்காப்பிய முழு முதனூலின்கட் கலவைகாண்டல் ஒருவாற்றானும் பொருந் துமாறில்லை யென்பதூஉம், யாரோசிலர் பொய்யாகக்கட்டி வழங்கிய வோரைதிகம் பற்றித் தொல்காப்பியம் முன்னிலையிற் பின்னிலைபெருக்கமுற்ற தென்னுமுரை திட்பமின்றி நுறுங்குமாமென்பதூஉம், இறையனாரகப் பொருளுரைக்குப் பாயிரங்கண்ட முசிறியாசிரியர் நீலகண்டனார் கூறுங் களவியல் வரலாறு ஒரோவிடங்களிற் சரிதவுரையியல் பிறழக்காண்டலின் அவ்வரலாற்றினையோ ரேதுவாகக்கொண்டு பண்டை காலத்தே தொல்காப்பியம் வழக்கமின்றி வீழ்ந்ததெனவும், அதனைக்கடைச் சங்கத்தார் திரும்பவெழுப்பிப் பெருக்கி கூறுந்துணிபுரை முன்பின் மாறுகோள் பெரிதுற்றுப் போலியாயழிந்துபடுமென்பதூஉம், தொல்காப்பிய மெழுதப் பட்டகாலத்தே ஆரியர்தென்றமிழ் மக்களோடு சிறிது பழகப்புகுந்தாராகலின் அந்நூலுள் வடமொழிக்குறியீடுகள் சிலவுஞ் சொற்கள் சிலவும் வருத லறியாது மற்றவை காணக்கிடத்தல்பற்றியே தொல்காப்பியங் கலவை கொண்டதாமெனுமுரை வாய்ப்புடையதாமா றில்லை யென்பதூஉம், நால்வகைச்சாதி வகுப்புக் கடல்கொள்ளப்படு முன்னெழுந்த பழந்தமிழ்ப்பாட்டுக்களிற் காணக்கிடத்த லானும் வடமொழிப் பண்டைப்பனுவல்களி லங்ஙனங் காணப்படாமையானும் அவ்வகுப்புத் தமிழ்நாட்டின்கண் உலகியலொழுகலாறுபற்றிச் செய்துகொள்ளப்பட்டதா

வழங்கப்படுத்தாரெனவுங்

மென்பதூஉம், அதனைப்பின் வந்தனுசரித்தொழுகி னோரான ஆரியமக்கள் தமக்கு நலம் பெருகுமாற்றால் அவ்வியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/193&oldid=1574612" இலிருந்து மீள்விக்கப்பட்டது