உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

169

திரித்து அதன்பண்டைக்கருத்து வேறுபடுத்து ஒருமை யழிக்கின்றாரென்பதூஉம், இங்ஙனமாகலின் தொல்காப்பிய நூலிற் காணப்படுஞ் சாதிவகுப்புச் சூத்திரங்கள் செருகப் பட்டனவாதல் செல்லாதென்பதூஉம், இருக்குவேதப் புருடசூத்தமந்திரவுரை பிற்காலத்தே

சய்யப்பட்ட

-

தொன்றாகலின் ஆண்டதுபற்றிச் சாதிவகுப்புத் தமிழ்நாட் டிலுண்டாயிற்றென்னு முரைபழுதாமாறில்லையென்பதூஉம் இனிது விளக்கித் தொல்காப்பிய முழுமுதனூலின்கட் கலவை யுண்டென்னும் நஞ்சகோதரர் - சவரிராய பிள்ளையவர்கள் கருத்துப் பொருத்தமிலதென்று காட்டிக் களைந்து தொல்காப்பியம் முழுமுதனூலாமென்பது நிறுவினாம். இத்தருக்கவுரையிலே பிழைபாடுளதாயின் ஆப்தர் சவரி ராயராதல் ஏனைவித்துவசிகாமணிகளாதல் அதனை யெடுத்து வலியுறுத்தி எமக்கு அறிவு கொளுத்துவாராக; இதன் கட்டாமுங் கருத்தொருப்பாடுறு வாராயின் அவ்வொருப் பாடு தெரித்து எம்மை ஊக்கமுறுத்தி யுவப்பிப்பாராக வென்னும் வேண்டு கோளுடையோம். உலகம் உண்மைப் பொருள் தேற்றக்கடவதாக.

சமாசாரக்குறிப்புகள் பிரமரகீடநியாயம்

இவ்வடமொழிச் சொற்றொடர் குளவி புழுவைத் தன்னினமாக்குகிற தென்றபழைய அபிப்பிராய மேற் கோளாய்க்கொண்டது. நியாயமெனினும் நயம் எனினு மொக்கும். இக்கொள்கை, குளவி பக்குவமடைந்த வோர் புழுவைத் தன் கூட்டிற்சேர்த்ததைக்

66

கொட்டுதலாற் புழுவுக்குக் குளவியைப்பற்றிய ஞாபகந்தவிர வேறின்றாகிறது; ஆகவே சிலநாளில் புழு தன்னெண்ணத்தின்படி குளவியாய் வெளிவருகிறதென்பது. இதனையே கரன்வதைப்படலத்தில் அஞ்சிறையறுபதமடைந்தகீடத்தைத், தஞ்செனத் தன்மய மாக்குந்தன்மைபோல்" எனக் கம்பரும், கைவல்லியத்தில் அடங்கிய விருத்தி யானென்றறிந்தபின் செறிந்த மண்ணின், குடம்பையுட் புழு முன்னூதுங் குளவியின் கொள்கைபோல்” எனத் தாண்டவமூர்த்தியாருங் கூறியுள்ளார். ஆசிரியர் சிவஞான யோகிகளுஞ் சிவஞான போதவுரையி லிப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/194&oldid=1574613" இலிருந்து மீள்விக்கப்பட்டது