உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

விழைவறு மளவு முழைமுகந்து பருகி யாறுசெல் வருத்தம் பாறிய பின்றை மாழையஞ் சிதரு மணங்கெழு நறவும் விரைசெறி முகிழு நிரைநிரை வீசிப்

போதுபொதுண் மரங்கண் மீதுநிழல் செய்யத் தூவியிடு தளிம மேவி யாங்குப்

புற்பொழி நிலத்துப் புறமிடைந் துறுவான் வயினோக் குறுதலுங் குயின்வழக் கின்றி மறுவிகந்து விளங்கிய தன்றே யவ்விடைப் பிறைமதிப் பிள்ளை நிறைமீ னித்திலங் கதிர்க்கை வாரி விதிர்த்துநக் கன்றே யீங்கிது காண்டலு மோங்கறிவு காழ்கொள வாய்மையே நினைதன் மேயினன் புகுந்து “மக்க ளென்போர் மிக்கபல் லுயிரினுந் தலைமைபெரி துடைய நிலைமைய ரென்ப தறிவா லென்னி னறிவொடு வரூஉங் கடுந்துய ருறுத்து கவலையோ பலவே விலங்கின மென்ப நலங்கிள ரறிவு தழுவுத லின்மையினிழிசின வென்னி னகழ்கிழங் குண்டு முகிழ்நறா மாந்தியும் பைங்குழை மென்றும் பானீர் குடித்து

மலையினு பொதும்பினு நிலையாக் கூட்டினும்

வருந்துத லின்றிப் பொருந்தி யிருந்து மொருதுய ரின்றி யுறுநலன் பலவே யதாஅன்று மக்கடம் மறிவான் முடிந்தன விலவே போக்கறு முணர்வு மாக்களுக் கின்மையி னெனைநிலத்து முடியா வினைகளு மிலவே யறிவறி யாமையிற் பெறுவதென் னென்று சூழ்ந்திட லுறினொன்று போந்ததூஉ மின்றே யகன்கண் ஞாலம் பொதுவின்றிப் புரந்த விகலறு வேந்தரு மிறந்தொழிந் தனரே பொய்யுரை கிளந்தும் புறம்பழித் தலைந்து

175

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/200&oldid=1574619" இலிருந்து மீள்விக்கப்பட்டது