உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறைமலையம் 8

– 8

கையறி யாமையிற் கடுங்கொலை புரிந்து நல்லோர் தொகுத்த பல்பொருள் வௌவியும் பாழ்வயிறு நிரப்பிய கீழ்களு மிலரே யுடம்பினை யோம்புங் கடம்படு பல்லுணா மலையினுங் காட்டினு மிலைமலி மரத்தினுந் தவப்பல வாகி யிருப்பன தேறாது நாளு நாளு மாள்வினைக் கழித்து வாளாது கழித ல்வருந்துநீர் மைத்தே நானிது செய்தே னெனதிது வென்னும் பேதைமை கந்தாப் பேரிடர் வருமே யறிவுறு பொருளையு மறியாப் பொருளையு மொப்ப நாடி யத்தக வியக்குந்

திருவருட் பெற்றி தேர்தொறுந் தேர்தொறு முவட்டெழு மின்பந் தலைப்படு மன்றே யெல்லு மெல்லியு மெழிலுற விளக்கி யந்தரத் தியங்கு நந்தா விளக்கமுங் காலமொடு திறம்பா வளந்தரு மழையு மழையா லுயிர்க்கு மாண்பொருட் டொகுதியு முழுமுத லறிவின் முதல்வன் செய்த வலகிலா வருளா னிலவுறு மன்றே யருட்பெரு வள்ளலா மத்தகை யோனை மருட்படு முணர்வினேன் றலைப்பட லென்றோ

நெஞ்சுநெக் குருகிச் செஞ்சொற் குழற

மெய்விதிர் விதிர்ப்ப மயிர்முனை நிறுத்த

நாத்தழும் பேற வேத்துரை மொழிந்து விழுந்தருள் வெள்ளத் தழுந்துநா ளென்றோ என்னை! என்னை! நா னிவ்வுழிவந்து பொச்சாந் திருந்து பொழுது கழித்தே னள்ளிடை யாமமா யினதே தெள்ளிய விளமதி சாயுமு னிவணின் றகன்று வளமுறு நிதிய வைப்புக் காண்ப” லென் றோடுகான் மருங்கி னீடு செல்வுழிப் பளிங்குருக் கன்ன துளங்குநீ ரோடையிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/201&oldid=1574620" இலிருந்து மீள்விக்கப்பட்டது