உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

பால்புரை பிறைக்கதிர் மேன்மிளிர்ந் தாடலு மெழுந்திரை கிழியக் கொழுங்கயன் மறிதலும் வானிடு வில்லின் வாளைமே லுகளலும் பாசடை நிவந்த நெறியவி ழாம்ப லிரவெனு மணங்கு திரைமடி யிருவிப் பாற்கதி ரூட்டும் பாலன் போறலு மன்பிடை நெகிழா வன்றிலு மகன்றிலுந் தூதுகல் லுண்ணுங் காதன்மிகு குரீஇயு மன்னமு மயிலும் பொன்னுரை கிள்ளையு மாடுவாற் சிரலும் புறவும் பிறவுங்

கூடுதொறுங் குழீஇத் துணையொடு துயிறலு மருப்பமா யயனின்ற பொருப்பகந் தோறுங் கழல்கட் கூகை குழறலோ டுளிய முரற்றலும் பிறவுங் கருத்துற நோக்கி யல்லாந் தெழுந்த வுணர்வின னாகி மல்லலங் காவிற் செல்லுங் காலை வைகறை யாமஞ் சிறிது கழிந்தன்றே யரனா ரருளொளி விரிதலு மருவிய 6 வாணவ வல்லிருள் காணா தொழிந்தாங் கங்கதிர் ஞாயிறு கீழ்பா லெழுதலு நிறையிருட் படல முறைமுறை கழிய வழகுறு புள்ளினந் துழனியெடுத் தனவே முழுநெறித் தாமரை புரிநெகிழ்ந் தனவே யிமையாக் கண்ண சுமைமயிர்த் தோகை பீலிவிரித் தொருபா லாலு மன்றே

யின்னன பலவும் பன்முறை நோக்கிக்

கவலைதீ ருள்ளமோ டுவகைபெரி துறுவோன் றன்னுயிர் தன்னெதிர் தான்கண் டதுபோற் பொன்முகடு வேந்த பொற்பம ரம்பலங் கண்ணெதிர் தோன்றக் கரையறு மின்பத்துக் குடைந்தனன் போல வடங்கா மதர்ப்புட னோடுவழி யோடி யீடுபெற லில்லா வச்சிரப் பலகையை நச்சி யீர்ந்து

177

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/202&oldid=1574621" இலிருந்து மீள்விக்கப்பட்டது