உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மறைமலையம் -8

தகைபெறு மணிகள் வகைவகை தெரிந்து குயிற்றுமிடங் குயிற்றிப் பூத்தொழில் கனியக் கடவுட் டச்சன் புடைபட வகுத்த

விலைவரம் பறியா நிலையுயர் வாயி

லுழைநுழைந் துறுதலு மழைமதர் நோக்கமொடு விரிந்தொழுகு நுதலில் வரிந்தநீ றிலங்க வால்வளை லோலப் பால்கெழு கழுத்தில் விரிமணிக் கோவை யழகொடு துவள நுரைமுகந் தன்ன நொறில்கெழு மறுவை யரைமருங் கசைய வொருகர மதனா லரிய வத்துவிதக் கலவையுங் காட்டிச் சிவஞான போதச் செம்பொரு டெளித்துப் பண்புறு சீடரைப் பார்வையிலாண்டுகொண் டுருவுடன் வைகிய குருவனைக் கண்டு கழுமிய நோக்கமோ டழுதுகுறை யிரப்ப “மன்னா வுலகத்து மின்னலின் மறையும் பொய்வளர் யாக்கையிற் பொருந்துபல் லுயிரு மெய்மெய் யென்று பொய்படு குநவே பொய்ப்பொரு டம்மின் மெய் விராயருட் டேறிப் புதுநல னெய்தும்

புகுந்தநின் றன்மை

யன்புடைக் கு..............

கட்புலன் கதுவாத் திப்பிய மெய்யரு

டிரளுரு வாக வருதன் மேயினம்

வேறுவே றியற்கை கூறுபல் லுயிரு

முய்வது காணச் செய்குவ மாதலின் றாங்குநல் லுருவமீ தொன்றோ வன்றே நிலனும் யாமே நீரும் யாமே

தீவளி விசும்புட னியாவு நாமே திங்களும் யாமே யெங்குமா முயிரும் வெங்கதிர் ஞாயிறு நங்கிளர் வடிவே

யீங்ஙன மாயினு மிவற்றின் வேறாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/203&oldid=1574622" இலிருந்து மீள்விக்கப்பட்டது