உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

நாங்கொளு முருவமு முண்டே பாங்குபெற நம்மியல் பறிந்துநம் மருள்வழி நிற்போ ரிம்மையே நீங்கா வின்ப மெய்தி யம்மைநம் மடிநிழல் வைகுவ ரன்றே யன்புடைத் தோன்றா லிங்குநம் மருளொடு பிரிவறக் கெழுமி யமர்நிலை நோக்கி யொருபே ரின்பத் துறைமதி சிறந்” தென் றுருவங் குருவாய் மருவிய முதல்வ னொளிபிழம் பாகிக் களிப்புறு விடையி லிமையம் பூத்த வுமையுடன் றோன்றி “யீதுநம் முண்மை வடிவா மாதலி னிளையோ யிவ்வுல குளையாங் காறும் பிறழா நினைவின் முறைமுறை யுயரி மறுமைநம் மடிநிழ லுறுக” வென் றருளி நிதிக்கோ னிதியு மதிப்ப நல்கிக் கரந்தன னென்ப வாகலி னிரந்தவம் முதல்வன் றிருவருண் முனியாது வெஃகி யதற்பட வொழுக லாற்றிசி னெஞ்சே வருவன யாவுந் திருவருட் குறிப்பே வாரா தனவும் பேரா வருளே

வந்தவா வழுத்தி வல்லாங்குப் பாடி வணங்குதும் வாழிய நெஞ்சே யணங்குடன்

மழவிடை யமர்ந்து வழிபடுமடியார்

வேண்டிய வேண்டியாங் காண்டுகொண் டருளிப்

புலியத ளுடீஇ மதிமகிழ் பிணித்து

மொழியள வமை முறை கே வெளியி

லொருகால் புரிவார்......

திருநடங் குயிற்றலுங்

179

- நா. வேதாசலம் பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/204&oldid=1574623" இலிருந்து மீள்விக்கப்பட்டது