உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

191

கற்பிக்கவும், தீதுநீக்கவும், தேகாரோக்யம் கட்பார்வை யுண்டாக்கவும், ஆடுமாடுகளைக்காப்பாற்றவும், ஆற்றினுங் கடலினும் மீன்களைப்பெருக்கவும் வல்லனவாம்.

L

இனிச் சீராலியோன் தேசத்திலுள்ளோர் மேலானவுங் கீழானவுமென இருவேறு வகைப்படும் பேய்களுளவென்றும், அவற்றுண் மேலானபேய்கள் மலைக்குகையினுள்ளும் பெரிய மரங்களினும் ஆற்றினடுவிற்றோன்றும் மலைகளினும் இருக்கின்றன வென்றும் நம்புகின்றார்கள். அவர்கள் பயிரிடுவதற்குமுன் இவ்விடங்களிலுள்ள பேய்களுக்குச் சில பிராணிகளைப் பலியிடுகின்றார்கள். அவ்வாறு பலியிடா விட்டால் விளைதலில்லையாம். கீழான பேய்கள் கிராமாந்தங் களினும் கிராமங்களினும் வசிக்கின்றனவாம். இன்னும் அவர்களிற் சிலர் ஏரிகளையும் ஆறுகளையும் மிகவுமன்போடு வணங்குகின்றனர். இஃதல்லாமலும் எண்ணிறந்த விலங்குகளும் பாம்புகளும் தேவாவதாரமாக உபாசிக்கப்படுகின்றன. சிலவிடங்களில் முதலைகளை வணங்குகின்றனர், வேறுசில விடங்களில் சிறிய தோராலயத்தில் ஈக்களைத் தொகுத்து வைத்துக்கொண்டு அவற்றை வணங்குகின்றனர்.

இனிப்பொற்கரைப் பக்கங்களிலுள்ளோர் பூர்வீகர்களை வழிபடுகின்றனர்.யாகங்களும் பலிகளும் வேட்டுஇடுகின்றனர். இறந்தோருருவங்களைக் களிமண்ணாற் சமைத்துக் கிராமத்தி லுள்ள ஓர்மரத்தின்கீழ் வைக்கின்றார்கள். இறந்தோர் மற்றை ஓர் உலகத்திற்குச் செல்கின்றாரெனவும், ஆண்டு இங்கிருந்த வாறே யிருப்பரெனவும், இங்கு அவர் தமக்கு உறவாயினோர் இடும் அவிப்பலியைப் பயன்படுத்துகின்றனரெனவுங் கூறாநிற்பர். மற்றை யுலகத்தில் இன்பத்துன்பநுகர்ச்சி யுண்டெ டன்னுங் கருத்து அவர்க்கு இல்லை. விக்கிரகத்திற்கு அதிருப்தி உண்டாதலால் நோய்முதலான துன்பங்கள் உற்பத்தியாகின்றன வன்கின்றார்கள். இவர்களுடை வர்களுடைய வழக்கவொழுக்கங்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியாக் கண்டத்திலுள்ளோரை ஒத்திருக்கின்றன. இவர்கள் நர பலியிட்டுவந்தனர். அவர்கள் வழிபடுந் தெய்வங்களுள் சாசா போன்சம் என்பது மிகக்கொடிய தென்றும், வழிச்செல்வோரை அது தின்று விடுகின்றதென்றுஞ் சொல்லுகின்றார். அஃது ஒருதரம் வகுண்டால் பின் அதனைச் சாந்தப்படுத்தல் மிகவரிதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/216&oldid=1574635" இலிருந்து மீள்விக்கப்பட்டது