உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

  • மறைமலையம் - 8 – மேலுங்கீழுமிடையுமுள்ள

எல்லாவிடங்களினும்

விளங்கித்தோன்றிப் பிரகாசிக்குஞ்சூரியனைப்போல, எல்லாப் புகழ்மையும் எல்லாவாற்றலுமுடைய வழிபடுகடவுளான அவனொருவன் தன்முதற்காரணத்தோடொற்றித்து நிற்கு மெல்லாவற்றையும் ஆட்சிசெய்கின்றான்.

(4)

விசுவயோனியாயிருக்கும் அவன் சுபாவத்தைப்பக்குவ முதிர்ச்சியடைவிக்கின்றான்; அங்ஙனம் பக்குவமுதிர்ச்சி யடை ய வல்ல எல்லாப்பிராணிகளையும் திரித்துக் கொண்டிருக் கின்றான்; அவனொருவனே இவ்வுலகமெல்லாம் ஆட்சி செய்கின்றான்; எல்லாக்குணங்களையும் பகுத்தி டுகின்றான்.

(5)

வேதங்களில் மறைபொருளாயிருக்கும் உபநிடதங்களில் அவன்மறைந்திருக்கின்றான். வேதங்கட்கு அவனே காரண னென்று பிரமனுணர்ந்தான். அவனையறிந்த முன்னைத் தேவர்களும் இருடிகளும் அவன்மயமாய் விளங்கினார், மரணத்தைக்கடந்தார்.

(6)

குணங்களையுடையனான ஆன்மாவானவன் கருமபலன்

களின் பொருட்டும் அக்கருமங்களை நுகருதற்பொருட்டும் அவற்றைச்செய்கின்றான்; அநேக ரூபங்களுடையனாய் முக் குணங்களான் விசேடிக்கப்பட்டோனாய் மூன்று நெறிகளில் ஒன்றனைத்தெரிந்துகொள்ளும் விசுவாதிபன் தன்கருமங்

களானே ஒருபிறப்பினின்று மற்றோர்பிறப்புக்குச்

செல்கின்றான்.

(7)

ல்

கருவிகளில் பலவேறு வகைப்பட்ட எறிகருவிகள் படைகள் வெளிறின சிவப்புப் பூசித் தொங்கவிட்டிருக்கும். உபாசிக்கின்ற காலையில் உபாசகன் திருத்தமில்லா மணி போன்ற ஓர்கருவியை அசைப்ப மற்றையோர் மற்றைக் கருவிகளை யெறிந்து விக்கிரகத்தின் முன்விளையா செய்வார். இனிக்காங்கோ தேசத்திலுள்ளோர் வீடுகள் உள்ளும்புறமும் விக்கிரகங்களும் உருக்களும் நெருங்கவைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றுட் சில மின்னலைத் தம் ஆணைவழி நிறுத்துகின்றனவாம், சில காற்றை நிறுத்துகின்றனவாம், சில மழையையாம். சில புல்லுருக்களைப்போன் மற்றைப் பிராணிகளை விலக்குகின்றனவாம். மற்றையன மந்திரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/215&oldid=1574634" இலிருந்து மீள்விக்கப்பட்டது