உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

189

அவனுருவங் கண்ணோக்கிலமைவதன்று. இதயத்தானும் மனத்தானும் இதயத்தின் கண்ணேயுறைகின்ற அவனை யறிகின்றவர்கள் மரணத்தைக்கடக்கின்றார்கள். (20)

66

இடருழக்கின்ற யாரும் ‘அவன்பிறவாதவன்' என்று நினைந்து “ஓ உருத்திரனே! மங்களகரமான நின் தட்சிணமுகம் எம்மை என்றுங் காக்கக் கடவதாக" என என வழுத்துமாறு காணப்படும்.

(21)

அவியுணவுகளான் நின்னையாம் என்றும் வழிபடு கின்றோமாதலால், எம்மக்களையும் எம்பேரர்களையும் எம் முயிர்களையும் எம் குதிரைகளையும் வருத்தாதே, கோபத் தினால் எம்முடைய வீரர்களையுங் கொன்றுவிடாதே.

நான்காமத்தியாயம் முடிந்தது.

ஐந்தாம் அத்தியாயம்

-

(22)

எவனிடத்தில் அறிவறியாமை விளக்கமின்றாய்க் கிடக்கின்றனவோ -அறியாமை உண்மையாகவே அழிதலுறுவது அறிவோ உண்மையாகவேநிலைதலுறுவது எவன் அறிவையும் அறியாமையையும் ஆளுகின்றானோ அவன் அட்சரமான அந்த வரம்பில்லாப் பரப்பிரமப் பொருளை மற்றவற்றின் வேறாயிருக்கின்றான்.

(1)

தானொருவனேயாயிருக்கின்ற அவன் சிருட்டி காரணமான ஒவ்வொன்றனையும் ஒவ்வோருருவங்களையும் இன்னுமற்றை எல்லாக் காரணங்களையும் ஆளுகின்றான்; தன் புதல்வனான கபிலவிருடிக்குப்படைப்புத்தொழில்தொடங்கிய காலத்தே எவ்வகையறிவையுந் தந்து அவன்பிறக்கின்ற காலையில்

அவனை நோக்கினான்.

(2)

அந்தப்பழனத்தின்கண்ணே பலவேறுவகையாற் பலவேறு திரிவுபாடுகள்செய்த அந்தக்கடவுள் அதனைத் திரும்ப அழிக்கின்றான்; அவ்வாறே தைவிகமுடைய முனிவோரைத் தோற்றுவித்த மகான்மாவான அம்முதல்வன் எல்லாவற்றிற்குந் தலைவனாயிருந்தாட்சிசெய்கின்றான்.

(3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/214&oldid=1574633" இலிருந்து மீள்விக்கப்பட்டது