உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் 8 - 8

யோனாய், விசுவத்தினிடையுருவி நுழைந்திருக்குமொரு வனாய்ச் சிவனாயுள்ளோனை யாரறிகின்றார்களோ அவர் என்றும் நிலைபேறுடையசாந்தியடைகின்றார். (14)

உரியகாலத்திலே இவ்வுலகினை இரட்சிக்கின்றவனும், சருவபூதங்களினுங் கூடமாயிருந்து இவ்வுலகிற்கு அதிபனா வானும், பிருமவிருடிகளும் தேவர்களும் தன்மாட்டு மனவொரு மையாற் றலைக்கூடி நிற்ப விளங்குவோனுமான அவனை யார் அறிகின்றார்களோ அவர்கள் மரணபாசத்தை அறுக்கின் (15)

றார்கள்.

வண்ணெயின்கண் நெய்போல அதிசூக்குமமாய்ச் சருவபூதங்களினும் கூடமாயிருக்கின்றவனும், தானொருவனே யாய் இவ்வுலகினுள் வியாபிக்கின்றவனுமான சிவனை யார் அறிகின்றார்களோ அவர்கள் சருவபாசங்களினின்றும் விடுபடுகின்றார்கள்.

(16)

எவனுடைய சிருட்டியாய் இந்தவுலக மிருக்கின்றதோ ய அந்தக்கடவுளும், எவன் சருவசீவர்களின் இதயத்திலே என்றும் வசிக்கின்றானோ அந்தப் பரமான்மாவுமானவன்உள்ளத்தின்கண்ணே மநீஷா எனப்படும் பகுத்துணர்ச்சியானும் மநஸா எனப்படுந் தியானத்தானும்வெளிப்படுகின்றான்.யார் அவனையறிகின்றார்களோ அவர்கள் மரணத்தைக்கடக்கின்றார்கள்.

(17)

இருளில்லையானபோதே பகலுமில்லை யிரவுமில்லை உள்ளதுமில்லை யில்லதுமில்லை, சிவனொருவனே கேவல னாய் உளன்; அவன் என்றுமுள்ளோன், பிரமத்தையுணரும் பண்டை யறிவானது அவனிடத்திருந்தே எழுதலால் சவித்திரி யினால் அவன் அறிந்து வழிபடற்பாலான்.

(18)

மேலேயுள்ள இடத்தினும் கீழேசென்ற இடத்தினும் இவை யிரண்டற்கும் டை வெளியினும் அவனையறிய வல்லார் யாருமிலர். இவ்வுலகின்கட் புகழ் மேம்பட்ட திருநாம் முடையனான அவனுக்குச் சமமாக எடுக்கப்படுவ தொன்றுமில்லை.

(19)

யாருமவனைக் கண்ணாற் கண்டறியமாட்டாமையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/213&oldid=1574632" இலிருந்து மீள்விக்கப்பட்டது