உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

187

ஆயினும், அது வழிபடற்பாலனாகிய முதல்வனையும் அவன் றன்றிருவருளையும் வேறாக அறிதலாலே துக்கத்தினின்றும் விடுபடுகின்றது.

(7)

என்றும் நிலைபெறுவதான இருக்கின் எழுத்தாகவும் எல்லாத்தேவர்களும் தங்கும் நிலைக்களனான பரமவியோம மாகவும் அவனை யறியமாட்டாதவர்க்கு அவ்விருக்குவேத மந்திரவுரைகள் என்னபயனுடையவாம்? ஆனால், அவனை யறியவல்லார் பரமுத்தி தலைக்கூடுகின்றார். (8)

சந்தசுகள், வேள்விகள், பலிகள், விரதங்கள், இருந்தது, இருப்பது, மறைமொழி முதலியனவெல்லாம் அதனினின்று உண்டாயின. அவன்மாயையோடு ஒற்றித்து நின்று உலகைப் படைத்திடுகின்றான்; இதற்கு மற்றை யான் மாவானது

மாயையால் தளைக்கப்படுகின்றது.

L

(9)

மாயையைப் பிரகிருதியெனவும் அவளோடொற்றித்து நிற்போனை மகேசுரனெனவும் அறிக; இவ்வுலகமுழுவதூஉம் வாய்மையாகவே அவனுடைய அவயவங்களால் வியாபிக்கப் படுகின்றது.

(10)

யார் அவனை யறிகின்றார்களோ அவர் ஒருவர்மாத்திரம் வையெல்லாம் ஒடுங்கியுமீண்டும் வருகின்ற பிரகிருதி மாயை யினையும் அவற்றின் காரியங்களையும் தம் வழிப்படுத்து ஆளா நிற்பர்; வேண்டியவெல்லாம் நல்கும் ஈசனைப் புகழப்படுங் கடவுளை யார் அறிகின்றார்களோ அவர் என்றும் நிலைபே றுடைய சாந்தியடைகின்றார்.

(11)

விசுவாதிகனும் மகாவிருடியும் தேவர்களைப் படைப் பித்து அவர்க்குப் பெருமை தந்திட்டவனும் இரணியகருப்பன் பிறப்பைநோக்கி யிருந்தோனுமான உருத்திரக்கடவுள் எமக்கு மங்களகரமான அறிவையளித்துப்பலப்படுத்துவானாக.

(12)

தேவர்கட்கு அதிபனும், எல்லாவுலகங்கட்குங்களை கணா வானும், துவிபாதசதுட்பாத உயிர்வருக்கங்களை யாளுமீசனு மான கடவுளுக்கு நாம் அவியுணாக் கொண்டுவருதுமாக.

13)

சூக்குமத்தினுஞ் சூக்குமமாய் உள்நுழையப் படாததனுள் ளிருப் போனாய், உலகசிருட்டிகருத்தாவாய், அநேகரூபமுடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/212&oldid=1574631" இலிருந்து மீள்விக்கப்பட்டது