உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் - 8

நான்காம் அத்தியாயம்

தன்

தானொருவனேயாய் வேறுபாடின்றியிருந்து அளவிறந்த சக்திகளோடு ஒற்றுமையுறுதலால் அவ்வவற்றின் ன்றியமையாநிலைக்கேற்ப அளவிறந்த வேறுபாடுகளைப் படைத்திடுவோனாயும், சங்காரகாலத்திலே உலகந்தன் கண் ஒடுங்கப்பெறுவோனாயும் உள்ள அவனே கடவுள். அவன் நமக்கு மங்களகரமான அறிவைத்தந்தருள்வானாக. (1)

அவன் தீயும் ஆவன், அவன்சூரியன், அவன் வாயு, அவன் சந்திரன், அவன்பிரகாசிக்கும் விண்மீன், அவன் பிரமம்; அவன் நீர், அவன் பிரசாபதி.

(2)

நீமகடூஉ, நீ ஆடூஉ, நீ இளைஞன், நீகுமரி, தண்டூன்றித் தளர்ந்து நடக்குமுதியோனும்நீ, நீபிறந்திருக்கின்றாய், சருவமும் உன்முகம்.

(3)

கரியவண்டுநீ, சிவந்தவிழிகளுடைய பச்சிளங்கிள்ளையுநீ, மின்னலும் பருவங்களும் கடல்களும் தன்கருப்பையிற்

கிடந்துறங்கவிளங்கும் மேகமுநீ; தொடக்கமின்றியே எல்லா வற்றையுந் தழுவிநின்றாய்; என்னை? நின்னால் எல்லா வுலகங்களும் படைக்கப்படுகின்றனவாகலின்.

(4)

பிறவாத ஒன்று தன் இன்பநுகர்ச்சிப்பொருட்டாகச் செம்மை வெண்மை கருமை நிறங்களுடன் ஒரேயுருவாய் எண்ணிறந்த பிரசைகளைத் தருவதாய்ப் பிறவாதாயுள்ள மற்றொன்றைச் சமீபிக்கின்றது. பிறவாத ஏனையொன்று அவளைவிட்டு

அவளிடத்தின்பநுகர்ந்தொழிந்தபின்

நீங்குகின்றது.

(5)

எப்போதும் ஒரேபெயரான் வழங்கப்படும் இரண்டு பறவைகள் அந்த ஒரேமரத்தின்மேல் வசிக்கின்றன. அவற்றுளொன்று அவ்வத்திமரத்தின் இனிய பழத்தை நுகருகின்றது, மற்றொன்று சாட்சிமாத்திரையாய்ச் சுற்றிலும்

நோக்கிக்கொண்டிருக்கின்றது.

(6)

அந்தமரத்தின்கண்ணே வசித்து மயங்கும் புருடனா னவன் உலகிடையழுந்திச் சக்தியின்மையால் வருந்துகின்றான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/211&oldid=1574630" இலிருந்து மீள்விக்கப்பட்டது