உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

185

இன்னுமிவ்வாறே தமிழின்கட் காணப்படும் பலநுட்ப வேதுக்களால் தமிழ்மொழிமற்றெல்லாச் சொற்களினும் பழைதாமாறு சமயநேர்ந்துழியெல்லாம் விரித்து விளக்குவாம்; நமக்கு ஆப்த நண்பர்களாயுள்ள வித்துவசிகாமணிகளுந் தாந்தா மாராய்ந்திட்ட தமிழ்த்தொன்மை மாட்சி விரித்து எழுதும் படி அவர்களைவேண்டிக்கொள்ளுகின்றோம்.

எல்லாவிடங்களிலும் கைகால்களுடையனாய், எல்லா விடங்களிலும் விழிகளும் முகமுமுடையனாய், எல்லாவிடங் களிலும் செவிகளுடையனாய் அவன் உலகத்தினுள் யாண்டும் (16)

வியாபிக்கின்றான்

சருவ இந்திரிய குணங்களோடும் பிரகாசிக்கின்ற அவன் அவ்வெல்லா இந்திரியங்களுமின்றி யிருக்கின்றான். எல்லா வற்றிற்கும் பிரபுவும் ஈசனும் அடைக்கலமாவானும் அவனே யாம்.

(17)

பட்டினத்தின்

ஒன்பதுவாயில்களோடுங் கூடிய உள்ளுறைகின்ற ஆன்மாவானது சராசரபேதங்களான உலக முழுவதூஉந் தன் கீழ்ப்படுத்துப் புறப்பொருள்களில் உலாவு கின்றது. (18)

கைகால்களின்றி அவன் வினாகின்றான், எடுக்கின்றான்; கண்களின்றியே காண்கின்றான்,செவிகளின்றியே கேட் கின்றான்; அறியப்படுவனவெல்லாவற்றையும் அறிகின்றான்; ஆயினும் அவனையறிகின்றதொன்றும் ஆண்டில்லை. அவர்கள் அவனைப் பெரியனான புருடனென்று சொல்லுகின்றார்கள்.

(19)

அவன் சிறியதினெல்லாஞ் சிறியனாயும் பெரியதி னெல்லாம் பெரியனாயும் இப்பிராணியின் இதயகுகை யினுள்ளே வசிக்கின்றான். படைப்புக்கடவுளான

ஈசன்

திருவருட்கண்ணால் எல்லாம்வல்ல அவ்விறைவனைத் தொழிலற நோக்கவல்லார் துக்கத்தினின்றும் விடுபடுகின்றார்.

(20)

அழிவில்லாதவனும் பழையோனும் எல்லாவுயிர்க்குயிரா வானும்யாண்டும் வியாபிக்கின்ற தன்றன்மையாற் சருவஞ்ஞனும் அவனென அறிகின்றேன். பிரமஞானிகள் அவனைப் பிறப்பிலியென்றும் நித்தியனென்றுங் கூறாநிற்பர்.

மூன்றாமத்தியாயம் முடிந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/210&oldid=1574629" இலிருந்து மீள்விக்கப்பட்டது