உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மறைமலையம் 8 – 8

காலத்திலேதான் சிறுமகார்பால் நாவினாற்பிறக்குஞ் சொற்காண்ட லரிதென்ப தெமக்கினிது விளங்கிற்று. இனி, நாவினாற் பிறக்கு மொலிகொண்டு தமிழ்ச்சொற்கள் தொடங்காமை யென்னை யென்னு மேலையாசங்கையினை ஈண்டாராயலுறின், தமிழ் மொழி யுற்பத்தியான பண்டைக் காலத்தே அதனை வழங்கிய மக்கள் உறுப்புக்களுரமேறி யரிது முயற்சி செல்லாத இளம்பருவத்தே சொற்சொல்லுஞ் சாதுரிய மறிதலுறுவா ராயினாரன்பதூஉம், அப்பருவத்தே முற்பட்டுத் தோற்றமுற்ற மொழி தமிழேயா மென்பதூஉம் நன்றுணரக் கிடக்கின்றன. இனி, வடமொழி, இலத்தீன், கிரேக்கு, இப்புரு முதலான பாடைகளிலே நாவினாற் பிறக்கு மொலியெழுத்துக்கள் முதற்கொண் டெழுந்த சொற்கள் காணக்கிடத்தலின், அம்மொழிகளெல்லாந் தம்மை வழங்கிய மக்கள் உறுப்புரம் பெற்று வேண்டியவா றியக்கும் பிற் பருவத்தே தோற்றமுற்றெழுந்த வியல்பினவாதல் வெள்ளிை மலைபோல் விளக்கமுடைய தாகின்றது. எனவே, வடமொழி முதலான நாற்பெரும் பாடைகளும், உற்பத்தியுற் றெழுதன் முன்னரே, தமிழ்ச் செஞ்சொல் தோற்றமுற்றெழுந்த தொன்மை மாட்சி யினிது விளங்கலின், தமிழ் ஏனை எல்லா மொழிகளிலும் பழைதாமென நிறுவுதற்கு யாமெடுத்துக் கொண்ட மேற்கோள்

வாய்ப்புடையதாமாறுகாண்க.

அற்றேலஃதாக, ட்,ண் முதலான அவ்வெட்டு மெய் யெழுத்துக்கள் தமிழ்மொழியிற்காணப்படுதலும் அதன் றொன்மை மாட்சிக்கு ஓரிழுக்காமாலெனின்;- அறியாது கடாயினாய், தமிழ்வழங்கமக்களுறுப் புரமேறிய பிற்காலத்தே தோற்றமுற்றெழுந்த அவ்வெழுத்துக்கள் மொழியிடைப் படுத்து வழங்கக்காண்டலினஃதிழுக்காது. அல்லதூஉம், மொழி முதலிலே நாவெழுத்துக்கள் தொடங்கியுரைத்தற்கு வேண்டப் படும். அத்துணைமுயற்சி, அவற்றை மொழியிடைப்

படுத்துரைக்கும்வழி வேண்டப்படாதென்பது ராமன் இராமன் என்னு மிரண்டனையுந் தெரிந்துரைத்துக்காண்க. இங்ஙனம் மொழியிடைப் படுத்தற்கண் முயற்சி சிறுகுதலின், அச்சிறு முயற்சியாற் பிற்காலத்தே உற்பத்தியாய் நடை பெறலுற்ற அந்நாவெழுத்துக்கள்பற்றித் தமிழின் றொன்மை மாட்சிக்கு வரக்கடவதோர் குற்றமில்லை யென்றுவிடுக்க. இதுநிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/209&oldid=1574628" இலிருந்து மீள்விக்கப்பட்டது