உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

183

தம்மிதழை மேலுஞ் சிறிது வலிந்து இயக்குமாறறிந்து தந்தையைக் காண்டொறும் பா பா என்றழைத்தலானே அப்பா எனுஞ் சொல் உற்பத்தியாயிற்று. இங்ஙனம் மெல்லென் றொலிக்கும் ஒலி நுட்பம்பற்றி மகரத்தையும் அதனோடோ ரினப்பட்ட எழுத்துக்களையுந் தமிழ் நூலார் மெல்லெழுத் தென்பவா றோதுவாராயினார்; வல்லென்றொலிக்கும் வகைபற்றிப் பகரத்தையும் அதனோ டோரினப்பட்ட எழுத்துக்களையும் வல்வெழுத்தென்றவ் வாறோதினார். ங்ஙனஞ் சிறுமகாரான் முதன் முதன் மொழியப்படும் மெய் ஒலியெழுத்துக்கள் மகரமும் பகரமு மாதல்பற்றியே, உலகத்தின் கட்பரந்து வேறுவேறு வழங்கப்படும் மொழி களினெல்லாம் தாய் தந்தையரை யழைக்குஞ் சொற்கள் அம்மா அப்பா எனுமிரண்டேயாயின. உலகவியற்கைத் திறம்பற்றி மொழியப் படும் அம்மா அப்பா வென்னுஞ் சொற்பெற்றி தேறமாட்டாத வடநூல்வல்லார் சிலர் அவையிரண்டும் மாதா பிதா

வென்னும் வடமொழி களின் சிதைவாய்த் திரிந்து தமிழில் வ வழக்கமுறுகின்றன வன்றுரைத்து ஏதம்படுகின்றார். இதுகிடக்க.

இனி மேலே காட்டிய ட்,ண் முதலிய வட்டு

மெய்யெழுத்துக்களும் கா மேலண்ணத்தைத் தொடுதலானே பிறக்கும் நாவெழுத்துக்களாம்இ அங்ஙனம் மேலண்ணந் தொட் டுச்சரித்தாற் பொருட்டு வேண்டப்படுமுயற்சி உறுப்புக்கள் வலிவேறி வேண்டியவாறியக்கப்படுங்காலத்தே வருவதொன்றாம். இதழ் ேநாப் பண்ணத்தொழில்கள் வருந்தி நிகழாக் குழவிப்பருவத்தே யரிதுமுயவமாட்டா தெளிது சல்லும் முயற்சியே தோன்றா நிற்கும். அங்ஙனம் முயற்சி யெல்லா மெளிதுசெல்லாநிற்குங் குழவிப்பருவத்தே நாவினாற் பிறக்குஞ் சொற்றோற்றம் காண்டலரிதினும் அரிதாம். யாமொரு நாள் மூன்றுவருடஞ் செல்லாநின்ற ஒருபிள்ளை எனைச் சிறுமகார் சிலரோ டொருங்குவிளையாடிக்கொண்டிருத்தலை யுற்றுநோக்கி யிருந்தோம்; அப்போது அப்பிள்ளை ராமன் என்னும் பெயருடைய மற்றோர் சிறுவனை ‘ஆம்' ‘ஆம் என்றழையா நின்றது; அதனைக் கேட்டலும் எம்முணர் வெல்லாம் ஒருவழி யொருங்கி யதன்கண் உருவி நுழைந்தா ராய்வான் புகுந்தன. அங்ஙன மாராய்ச்சி நிகழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/208&oldid=1574627" இலிருந்து மீள்விக்கப்பட்டது