உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

193

கின்றார்களாம். அவர்கள் அத்தெய்வங்களைப் பெறுமாறு; ஒருபட்டினத்திற் சிலர் ஒருவகுப்பாய்ச் சேர்ந்தகாலத்தில், அவர் கிராம தெய்வத்தை வழிபடுவானான ஒரு குரவனிடஞ்சென்று அவன் திருத்தியுறுமாறு அடியுறை கொடுத்துத் தங்கருத்துப் புலப்படுப் பார்களாம். அவர்களிடும் அடியுறை தனக்குப் பிரீதிகரந்தரு மாயின் அவனவர்களோடு உடன்சென்று கிராம தெய்வத்திற்குத் தன்கருத்தை மந்திரவொலிகளானும் சடங்குகளானும் வெளியிடுவானாம்; பின்

அக்கிராம்

தெய்வத்தினின்று உத்தரவு பெறப்படுவதான ஒருநாளில் அக்குரவன் மந்திரநடன மியற்றியும் வாய் நுரைதள்ளக் கண்கள் உருள மந்திரவொலி களெழுப்பியுந் தெய்வமேறினோன்போல் டுவானாம். அப்போழ்து அவன்வாயிற்பிறக்குஞ் சொற்படி ஓரிடத்திற்குச் சென்று அங்குள்ள ஒருகல்லையாவது மண்ணையாவது மரக்கட்டை களையாவது கொண்டுபோந்து, அவற்றால் உருக்கள் அமைத்து அக்கூட்டத்தார் வசிக்கின்ற இடத்தில் தாபிப் பார்களாம்; அங்ஙனந் தாபித்த உருக்களைச் சுற்றறி மரக் கிளைகள் நிறுத்தி வேலிகோலுவார்களெனவும், அவ் வேலியிலுள்ள கிளைகள் மரங்களாய் வளர்ந்தபின் அவையும் பீடிஷ்மரங்களாக உபாசிக்கப்படுகின்றனவெனவும் அறி கின்றாம். அம்மரங்கள் என்றாயினுங் கீழ்விழுமாயின், அக் கூட்டத்தார் அக்கடவுளரின் பாதுகாப்புத் தம்மால் நேர்ந்த பிழைகளால் இல்லையாயிற்றெனவும், அக்குற்றத்தைக் கழுவும் பொருட்டுக் குரவனுக்கு அறிவித்து அவனாற் சடங்குகள் பலவியற்றிக் கடவுளருக்குப் புதியவோர் உறையுள் அமைக் கின்றார்களெனவுந் தெரிகின்றோம். இன்னும், குடும்பத்திற்குத் துக்க சம்பவநிகழ்வதாயின் அதனை யாராய்ந்தறிதற்கு அவர்கள் வழிபடும் போக்சம் என்னும் உருவைக் குரவன் நெருப்பிலிட்டுப்பார்ப்பான். அவ்வுருத் தீயில் வேவாதிருக்குமாயின் அஃதுண்மையான தெய்வமென்றுட் கொண்டு அதற்குப்புதிய புதிய சடங்குகளியற்றா நிற்பார்; அவ்வாறின்றிச் சிறிதாயினும் அது வெந்திருக்குமாயின் அதனையெறிந்து புதிய தொன்றைத் தெரிந்தெடுப்பர். அவ்வுருவத்திற்குத் திருவிழாக்கொண்டாடு நாட்களில் எல்லாரும் வெள்ளாடையுடுத்துக்கொண்டாதல் வெள்ளை வண்ணம் பூசிக்கொண்டாதல் பலியிடுகின்றார்கள்.

டு

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/218&oldid=1574637" இலிருந்து மீள்விக்கப்பட்டது