உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் 8 – 8

இனிப்பொற்கரைப் பக்கங்களிலுள்ள அம்மக்கள் வாருவருந் தாந் தனித்தனியே வழிபடும்பொருட்டுச் சுக்மன் என்னும் உருவை வைத்திருக்கின்றார்கள். இதனைக் குருவின்வழியாகவன்றித் தானே பெறலாமென்று கூறுவர். இந்த உருவைப்பெறும் பொருட்டு பொருட்டு ஒருவன் சாசாபோன்சம்

வசிப்பதான கரியதோர் காட்டினுட் குகைக்குச்சென்று, கரும்பிரசத்தை நிலத்திற்பெய்து மரத்தினின்றோர் சிறுகொம்பு துணித்து மக்களுருவத்தைப்போல் அதிற் செதுக்கிவைத்துக் கொண்டாதல், ஒருகல்லையெடுத்ததனைச் சுற்றி மூங்கில்நார் கட்டியாதல், ஒருசெடியின் வேரைக் கல்லியெடுத்தாதல், செம் மண்ணைத்திரட்டிக் கரும்பிரசம் அல்லது இரத்தத்தால் கிளியின் தோகைகளை ஒட்டி ஓர் உருவாக்கியாதல் அவற்றின்கண் காசாபோன்சம் என்பதனை நுழைந்துறையு மாறு வேண்டிக்கொள்ளுகின்றார். பின்னர்ச் சில இலைகளை நறுக்கிப் பிழிந்தெடுத்த இரசத்தை அவ்வுருவின் முன்வைத்து 'இதனையுண்டுபேசுக' என்றுரைக்கின்றார். அவ்வாறே அஃது அதனுள் நுழைந்ததாயின் மெல்லியதோரொலிகேட்கப்படு கின்றதாம். பின் அவ்வுருவத்தை இவ்விவ்வாறுவைத்து வழிபடல்வேண்டுமென்பதனைப்பற்றிச் சிலவினாய் விடை பெறுகின்றனராம். இங்ஙனமெல்லாஞ் செய்தும் அதில் தனக்கநுகூலமில்லையாயின், அவ்வுருவின்கண் அத்தெய்வம் நுழையவில்லையென்றெண்ணி யதனை வீசியெறிகின்றார். சுக்மன் என்னும் இவ்வுருவத்தைவைத்து வழிபடுவோர் மற்றையோராற் பெரிதும் அஞ்சப்படுகின்றார்; அவ்வுருவவழி பாடுடை யோர் தம்மேற் பகைகொள்வோர்க்கு மரணத்தை யுண்டுபண்ணுவரென்பதனால், இன்னும் அப்பொற்கரைப் பக்கங்களிலுள்ளோர் இங்ஙனம் உருவங்கள் தாபித்துக் கொண்டு அவற்றிற்குப் பலியிட்டு வழிபடுங் காலங்களி னெல்லாம் அவ்வுருவங்களையன்றி அவ்வுருவங்களுள் வசிக்குந் தெய்வங்களையே துணிந்துபாசிக்கின்றனர். தாமிடும்பலிகள் கன்முதலான அசேதனப்பொருளின்கட் சாரமாட்டா வெனவும், அவற்றுள் வியாபிக்கின்ற கடவுளே யவற்றை யேன்றுகொள் கின்றாரெனவுங் கூறுகின்றார். இச்சாதியார் மாட்டு நிகழும் விக்கிரக வழிபாட்டை யுண்மை ஆராய்ந்தறிய வல்லார் சேதனைப் பொருளையும் அசேதனப் பொருளையும் வழிபடுதற் கண் நிகழும் வேறுபாடு பெரிதா

யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/219&oldid=1574638" இலிருந்து மீள்விக்கப்பட்டது