உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

195

மென்றுணர்ந்து, அவ்வழிபாடு எத்துணையிறப்ப இழிந்த தாயினும் அது பற்றியஃதெள்ளற்பால தன்றென்று கடைப் பிடித்து, அவ்வவர் பக்குவக்கூறுபாடுகளை நோக்கி மற்றவை யெழுந்தனவாமென்றறியாநிற்பர். இவ் வுண்மை காணமாட்டா தார் அவரெல்லாம் அறிவானிழிபுடை யராதல் ஒன்றேபற்றி யவர்செய்யு மவ்வழிபாடுகள் அசேதனமான கன்முதலிய வற்றின்கட் செய்யப்படுகின்றன வென்று தமக்குத் தோன்றிய வாறே யுரைப்பாராயினார். மேஜர் எல்லீஸ் என்கின்ற துரையும் பொற்கரைப்பக்கங்களிலுள்ள மக்களுண்மையாற்செய்து போதரும் இவ்வழிபாட்டைப்பற்றி மிக மேலாக மொழிந் 7திட்டார். இதுநிற்க.

இனி நரபலியிடுதன் மிக விசேடமாய்க் கொண்டாடப் படு நாடு தாகொமே என்பதாம். அளவிறந்த மக்கள் இன்றும் பலியிடப்பட்டு வருகின்றார். தாய்தந்தையர் மாட்டு வைத்தொழுகும் விசேட அன்புடைமையானே அவரெல்லாம் அங்ஙனம் நரபலி யிட்டுவருகின்றார். அந்தத்தாகொமே தேசத்திற் செங்கோலோச்சுவானான அரசன் யமலோகஞ் செல்லுங்கால், தன்பரிவாரம் புடைசூழப்போகல்வேண்டு மென்னுங் கருத்துப் பற்றி அவன் முதன்மனைவிமார், பிறவிநாண்மனைவிமார், அலிகள், பாடகர், மேளகாரர்,

6

போர்வீரர் முதலாயினாரெல்லாங் கொலைசெய்யப்படு கின்றார். இங்ஙனங் கொல்லப்படுவோர் தொகை ஐந்நூறாகு மாயின் அதுமிகச்சிறந்த பழையவாசாரமாமென்று புகழ்ந்து போற்றுகின்றார்கள். வருடந்தோறுந் தாமடையும் வெற்றிப் பொருள்களுங் குற்றவாளிகளும் இங்ஙனஞ்செல்லும் அரசபரி வாரத்திற்கென்று திரட்டப்படுகின்றனர். அரசனோரி டத்திருந்து மற்றோரிடத்திற்குப் பெயர்ந்துசெல்லல்வேண்டு மாயின் அதனைத் தந்தையின் ஆன்மாவுக்கு அறிவிக்கல் வேண்டித் தூதன் தூதியாக ஒருவனையன்றி ஒருத்தியைக் கொலைபுரிகின்றார்கள். ஒருநாள் இத்தேயத்தரசன் நான்கு பேருடைய தலைகளையும், ஒருமான் ஒருகுரங்கு இவற்றின் றலைகளையும் வெட்டிப்பலிதந்தனனாம்; அங்ஙனம் வெட்டுண் டோருள் ஒருவனுயிர் சந்தைகளில் வசிக்கும் மற்றை யான்மாக்களுக்குத் தன் அரசன் றந்தையின்பொருட் டிது செய்யப் போகின்றானெனத் தெரிவிக்கச் செல்கின்றதாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/220&oldid=1574639" இலிருந்து மீள்விக்கப்பட்டது