உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் 8 – 8

ஒன்று நீர் நிலைகட்குச்சென்று ஆண்டுள்ள பிராணிகட்க தனைத் தெரிவிக்குப் பொருட்டுப் போகின்றதாம்; ஒன்று வழிகளிற்போய் ஆண்டுறையும் வழிப்போக்குயிர்களுக் கதனை யறிவிக்கின்றதாம்; ப மற்றொன்று ஆகாயத்திற்சென்று

ஆண்டுள்ள எல்லாவான் மாக்கட்கும் அதனைத்தெரிவிக் கின்றதாம்; இனி, மான் காட்டிற்குச்சென்று ஆண்டுள்ள விலங்கினங்கட்குத் தெரிவிக்குமாம்; குரங்கு சதுப்புநிலங் களினும் மரங்களினுஞ்சென்று ஆண்டுள்ள பிராணிகளுக்கு அதனை யறிவிக்கின்றதாம். இனி யிவர்கள் வழிபடுங்கடவுள் அறியப்படாத மௌ என்பதாம். பெண்டன்மையுள்ள மௌ என்பது திங்களுமாம்; அது ஞாயிற்றைக் குறிப்பிடாநிற்கும் ஆண்டன்மையுடைய லீசா என்பதைக்கூடி மனிதனை யுண்டுபண்ணிற்றாம். மெள என்னு மக்கடவுள் மனிதனினும் மிகச் சிறந்த தாகையான் அது மனிதரை நோக்குத லில்லை யெனவும், ஆதலால் அதனை வேண்டுவாரும் அஞ்சுவாரு மில்லையெனவும், அங்ஙனமாயிறும் பீடிஷ் என்னும் உருவவழிபாடுகளானே அதனை வயப்படுத்தலாமெனவுங் கூறாநிற்பர் புதிதாக வொருகருமஞ் செய்யத் தொடங்குவோன் தெய்வத்துணைபெறுதற்பொருட்டுத் தான் முதன்முதலிலே காணும் பறவை, விலங்கு, கட்டை, கல் முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டுபோய் அதனை விக்கிரகமாக நிறுத்தி வழிபடுகின்றான். அவ்வாறு வழிபடுவோன் றனக்குக் வேறு

6

கருமங்கள் அநுகூலமாய் முடிந்திடுமாயின்

துணைநாடுகின்றான். மௌ என்னுங் கடவுளுக்கு உதவியாய் நின்று நல்லோர்செய்யும் நற்கருமங்களையுந் தீயோர்செய்யுந்

தீயகருமங்களையும் ஒருகழியின் இரண்டுமுனைகளி குறித்திடுகின்ற மற்றோர் கடவுளுண்டென்றுரைக்கின்றார். யாரேனும் இறந்தொழிந்தால் அவர் சரீரத்தை மேற்சொன்ன கழியில் நிறுத்துப்பார்த்து நற்பக்கந்தாழுமாயின் அதனை இடுகாட்டிற் கொண்டுபோய்ப் புதைப்பர்; தீயபக்கந்தாழு மாயின் அதனைக்கண்ட துண்டமாகச் சேதித்து அழித்து அதிலிருந்த ஆன்மாவுக்கு வேறோர் சரீரஞ்செய்து வைக்கின்றார். இதுநிற்க.

L

இனி விடா நாட்டிலுள்ளோர் பிராசீனகாலந்தொட்டுச் சர்ப்ப வழிபாட்டின் கண்ணே தலைநின்று வருகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/221&oldid=1574640" இலிருந்து மீள்விக்கப்பட்டது