உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் 8 – 8

சுருங்கச் சொல்லிற் றன்னை ஓர்த்துணர்வார்க்கு, அது தன் பெயர்ப்பொருள் துணியப் பெரிதும் விளக்கித் தன்னாக்கி யோனைத் தண்டமிழ்க்கடலிற் றாவின்றெழூஉ மலர்கதி ரிளஞாயிறென் றறிவிப்பது. இது என்றுணிபு.

இங்ஙனம்

தங்களாக்கத்தையே என்றும் விரும்பும் தங்கள் அன்பன்

த-பா-சிவராமன்.

இந்துகாலேஜ் தலைமைத் தமிழ்ப்பண்டிதர், திருநெல்வேலி.

என் அன்பிற்சிறந்த ஐய

அன்புகூர்ந்து வரவிடுத்த சோமசுந்தரக்காஞ்சியாக்கம், திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை முதலியவற்றைக் கண்ணுற்றனனாக.

சோமசுந்தரக்காஞ்சியாக்கம் நுங்கள் தொல்காப்பியப் பொருளதிகார வாராய்ச்சியை இனிது புலப்படுக்குந் திறத்தது. இற்றை ஞான்றும் பொருளதிகாரம் ஆராய்வார் அரியராவர்; அவருள்ளும் நீயிர் ஒருவராகின்றீர்கள். திருவொற்றியூர் முருகர் மும்மணிக் கோவை சொற்பொழிவு பொருட்பொலிவு பொதியப்பெற்றுச் சங்கத்தமிழை நினைவு கூட்டலின் அஃது மும்மணிக்கோவையேயாம். நுங்களால் தமிழுலகம் விழுப்ப மெய்து மெனக்காண்டலின் நுங்கள் வாழ்நாட்செல்வ முதலியன நெடிது வளர்ச்சிபெறுக. இவ்விளமைப் பருவத்து முயற்சி முதுமைப்பருவத்தும் சோர்வின்றியுயர்ந்து மேம் பாடடைக. 'தம்மிற்றம்மக்களறிவுடைமைமாநிலத்து, மன்னுயிர்க்கெல்லா மினிது

66

சுபகிருது ஆண்டு கடகமதியம் 62.

இங்ஙனம் அன்பன்

மாகறல் - கார்த்திகேயன் மிஷனெரி டிரெயினிங்

ஸ்கூல்தமிழ்ப்பண்டிதர், சைதாப்பேட்டை.

சோமசுந்தரவிலாசம்

உள்ளூர் வெளியூர்களிலுள்ள நண்பர்கள் நமது அச் சியந்திர சாலையில் தமிழ்நூல்கள், விளம்பரங்கள், பத்திரிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/241&oldid=1574662" இலிருந்து மீள்விக்கப்பட்டது