உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப

ஞானசாகரம்

215

சிகந்தராபாத்தென்னும் நகரிலே சைவாபிமானம் மிக்க நண்பர்கள் மனவெழுச்சிமிகுந்து சித்தாந்த சைவ வாராய்ச் சியின் பொருட்டு இரண்டு சங்கங்கள் தாபித்து நடத்தா நின்றமை கேட்டுக் களிப்புறுகின்றோம். இவ்விரு வகைச் சித்தாந்த சங்கத்தாரும் சைவசமயாபிவிர்த்தினையே கோரி ஒற்றுமை பூண்டு உலகிற்குபகரிப்பார்களென்று திருவருளைச் சிந்திக்கின்றோம்.

'வைதிக சைவசித்தாந்தசண்டமாரும்' ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர நாயகரவர்கள் சரிதம் எழுதி முடிப்பிக்கவேண்டு மென்றும், அச்சரிதத்திற்கு வேண்டும் வரலாற்றுக் குறிப் புகளையறிந்த நண்பர்களெழுதி யுபகரித்தல்வேண்டுமென்றும் முதற் பத்திரத்திலேயே சுட்டிக்காட்டினோம். இரண்டோர் நண்பர் தவிர மற்றியாரும் அங்ஙனம் இதுகாறும் உபகரித்திலர். இதுதானோ சைவாபிமானம்; இவர்கள்தாமோ சைவப்பிரசார கரிடத்து அன்புபூண்டொழுகுவோர்; ஸ்ரீலஸ்ரீ நாயகரவர் களருமை பெருமைகளை நன்குணர்ந்த நண்பர்கள் தென்னாட்டின்கட் பலருளராகவும் அவருள் ஒருசிலராயினும் இதனைக் கவனித்திலாமை பெரிதும் இரங்கற்பாலதொன்றாம். அன்பர்களே! இனியேனும் நீங்கள் நாயகரவர்களைப்பற்றி யறிந்த வரலாறுகளை எழுதியனுப்பினால், அதுபேருபகார மாம். உங்கள் அரியபெயரோடு அவற்றை வெளியிடுவோம்; உங்கட்குப்புகழும் பெருமையும் உண்டாம்; சிவபுண்ணியமு மாம். சிறிது கவனித்திடுங்கள்.

த்

கலாசாலை

நமது ஞானசாகரப்பத்திரிகைபெறுங் மாணாக்கர்களும் ஏனைக் கையொப்ப நண்பர்களிற் சிலரும் 8- வது இதழ் பிரசுரமாதற்கு முன்னரே தாந்தாம் உபகரிக்க வேண்டிய கையொப்பத்தொகையை உபகரிக்கற்பாலார். நமது பத்திரிகை பிரசுரித்தற்குத்தொடங்கி இப்போது ஏழுமாதங்கள் கழிந்தன. இதுகாறும் அவ்வவர் சௌகரியங்கருதிக் கையொப்பத் தொகைக் கட்டணத்தைப்பற்றி வற்புறுத்தா திருந்தேம். இனியங்ஙன மிருத்தல் கூடாமையா லவர்கள் விரைதற்பாலார். நம்கையொப்ப நண்பர்களிற் பெரும்பாலார் முன்னரே தத்தங் கட்டணங்களை உபகரித்து நம்மையும் நம் பத்திரிகையினையும் அபிமானித்தமை பற்றிப் பெரிதுங் களிப் புறுகின்றோம். திருவருள் என்றும் அவ்வாறே நடாத்துவதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/240&oldid=1574661" இலிருந்து மீள்விக்கப்பட்டது