உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

214

-

மறைமலையம் 8 – 8

யவர்களை ஊக்கிய, ஊர்காவற்றுறைக்கோட்டு நீதிபதி ஸ்ரீமாந் கதிரைவேற்பிள்ளையவர்கள் வள்ளன்மையுந் தமிழபி மானமும் எம்மனோராற் பெரிதும் வியக்கப்படுவனவாம்.

கு

ஐயரவர்

கொழும்புச் சைவபரிபாலனசபையின் உபந்நியாசகரும் சிவபுராணப் பிரசாரகருமாகிய யாழ்ப்பாணத்து நல்லூர்ப் பண்டிதர் பிரம்ஹஸ்ரீ ந-வே-கனகசபாபதி களிடமிருந்து அவர்களாலெழுதப்பட்ட ‘சைவசமயவிளக்கம் முதற்புத்தகம்' 'திருவாதிரை மகோற்சவப்பிரபாவம்' சைவ பரிபாலனசபை மகோற்சவ விளக்கம்' முதலியன வரப்பெற்றோம். இவையெல்லாஞ் சைவசித்தாந்த நுணுக்கப்பொருளுரைத்து ஒழுகும் பெற்றிமை யானும், செந்தமிழ்நெறி வழாச் செவ்வியநடையி லெழுதப் பட்டிருத்தலானும் சைவ சமயிகளானும் தமிழ்விருப்புடை யோரானும் ஆராய்ந்தறியற் பாலனவாம். ஐயரவர்கள் பெருகிய வாயுளுந் தேகாரோக்யமு முடையராக வமர்ந்து இத் தன்மையவான நூல்கள் பலவியற்றி லகிற்குபகரித்து அதனைக் கடமைப்படுத்துவாராகவெனத் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

தூத்துக்குடிச் சிவஞானப்பிரகாசசபையின்கண் ஓர் புத்தகக் களஞ்சியம் தாபிக்கப்பட்டிருக்கின்றது. இதிற் றொகுக்கப்படும் புத்தகங்கள் பலரும் எளிதிற் பார்த்துணர அமைதலால் தமிழ்நாட்டு வித்துவசிகாமணிகள் தாந்தாமி யற்றிய நூல்களில் ஒவ்வொன்று இதற்கு உபகரித்தல் மிகநன்றாம். வேறுபிராசீன கிரந்தங்கள் தருதலும் பேருபகார மாம். நாமும் நம்முடைய நூல்களிற் சில இதற்கு அளித்திட்டோம்.

கற்கத்தாமாநகரிற் பரமகஞ்ச சந்நியாசவருட் கோலந் தாங்கி யுமைவழிபாட்டின் கட்டலைநின்று முத்தியடைந்த ஸ்ரீமது - இராமகிருஷ்ணருக்குப் பிரதம மாணாக்கராயிருந்து, அமெரிக்கா முதலான பாகிய கண்டங்களிலுள்ள மக்கள் உய்தல்வேண்டி அவர்க்கு நம்வேதசாரமாய் விளங்குஞ் சிவயோகநிலை விளங்கக்காட்டி யுபந்நியசித்து அவரை யெல்லாம் ஆண்டு கொண்டருளி அட்டாங்கயோக சமாதி நிலை தலைக்கூடிய ஸ்ரீமத் விவேகாநந்தசுவாமிகள் சிவராஜ யோகத்தானே சிவபதப்பேறெய்திய விஷயத்தை யறிந்து துக்கசாகரத்து அமிழ்ந்தினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/239&oldid=1574660" இலிருந்து மீள்விக்கப்பட்டது