உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

L

12. சமாசாரக்குறிப்புகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுன்னாகத்திலே மகா வித்துவானாய் விளங்கும் ஸ்ரீமது அ

பிள்ளையவர்களிடமிருந்து

பலவாக

குமாரசாமிப்

அவர்களாலியற்றப்பட்ட இலக்கண சந்திரிகை' 'ஏகவிருத்தபாரதம்' முதலியனவும் வரப் பெற்றோம். அவற்றுள் 'இலக்கணசந்திரிகை' என்னும் அரிய கிரந்தத்தை நாம் உற்றுநோக்கியகாலையில் எம் முள்ளத்தே அங்குரித்துப்பின் பெரிதாயெழுந்த மகிழ்ச்சியை என்னென்பேம்? இப்புத்தகம் 45-பக்கங்களடங்கிய தொன்றா யினும் அதன்கட்சொல்லப்பட்ட நுட்பவிஷயங்கள் மிகப் விரிந்தன. இதன்கண், வடசொற்கள் தமிழில் வடிவுதிரிந்து வழங்குமாறும், வடமொழி தென்மொழியில் எழுத்துக்கள் ஒற்றுமைப்பட்டு நடக்குமாறும், இவ்விரு மொழியினுங் காணப்படும் உபசருக்க வகுப்பும் அவற்றின் மாறுபடும், இடைச்சொற்கூறுபாடும், தத்தி தாந்தவகையும், பெயர் வினை உரிச்சொற்பாகுபாடும் இனிதுவிளங்க மிக நுட்பமாய் எடுத்துக்காட்டப்படும் ஒவ்வொரு சொல்லாராய்ச் சிக்கும் தொல்லாசிரியர் பிரயோக வாக்கியங்கள் நூற்பெயர் களோடு நன்கெடுத்து மொழியப் பட்டன. இங்ஙனம் பிரயோகங் காட்டிச் சொல்லாராய்ச்சி செய்யுநெறி, ஆங்கில நூல்வல்லார் செய்துபோதரும் பிலாலஜி என்னுஞ் சொல்லாராய்ச்சி யோடொத்தொழுகி யதனினுஞ் சிறப்புறு தலின் தமிழாராய்வா ரெல்லாரும் பிள்ளையவர்கள் செய்திட்ட இவ்வரிய நூலைப் போற்றிப்பயிறல் இன்றியமை யாதகடமையாம். நன்னூற்பயிற்சி செய்வாரினும் இந்நூற்பயிற்சி செய்வார் நுட்பவுணர்வு டையராவரென்பது பயின்றார்க்கன்றி ஏனையோர்க்கு விளங்காது.

தனைப்

இனிப்பிள்ளையவர்களுடைய அருமைபெருமைகளை னிதுணர்ந்து அவர்களை யபிமானித்து இந்நூலியற்றும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/238&oldid=1574659" இலிருந்து மீள்விக்கப்பட்டது