உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

சிவமயம்

திருச்சிற்றம்பலம்.

ஸ்ரீஜ்ஞானசம்பந்த குருப்யோநம:

வாழ்த்து

66

“வாழ்க வந்தணர் வானவ ரானினம்

வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக

ஆழ்க தீயதெ லாமர னாமமே

சூழ்க வையக முந்துயர் தீர்கவே”

ஞானசாகரம்

13. மாணிக்கவாசகர்கால நிருணயம்

சைவசமயகுரவருள் ஒருவரான மாணிக்கவாச சுவாமிகள் காலநிருணயஞ் செய்தற்பொருட்டு ஆங்கில மொழிவல்லார் ஆங்காங்கு வாதநிகழ்த்தி வருகின்றார். அவருள், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி-யூ- போப் என்பார் அம்மொழிபெயர்ப்பின் முதலிலே சேர்த் திருக்கும் பொருட் குறிப்பொன்றில், மாணிக்கவாசக சுவாமிகள் காலம் இனிது துணியப்பட வில்லையாயினும், அவர்காலம் கிறிஸ்துபிறந்த பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத் திலேயா மென்றுகோடல் உத்திநியாயங்கட்குப் பொருத்தமாவதொன் றென்றுரை கூறுகின்றார். இனி இவர் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு கழிந்து ஞானசம்பந்தர் முதலான மற்றைக் குரவர்தோன்றினாரென்றும் உரைப்பாராயினார்.

இனி, மாணிக்கவாசகர் காலநிருணயஞ் செய்தற் பொருட்டு ஆங்கில மொழியில் ஓருரை நூலெழுதிய நம் ஆப்த நண்பர் ஸ்ரீமாந்-திருமலைக்கொழுந்து பிள்ளையவர்கள், கடைச்சங்கநிலைபெற்று விளங்கிய

மாணிக்கவாசகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/244&oldid=1574665" இலிருந்து மீள்விக்கப்பட்டது