உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் 8 – 8

ஞான்றிருந்தாரெனவும், அக்கடைச்சங்கத்தில் ஆசிரியர்- திருவள்ளுவநாயனார் தமது நூலை அரங்கேற்றியகாலம் கிறிஸ்து பிறந்த முதனூற்றாண்டாகலான் மாணிக்கவாசகர் காலமும் அந்நூலரங்கேறியகாலத்திற்குச் சிறிது பின்னாவதா மெனவும் அரியபெரிய நியாயங்கள் பலகாட்டித் தம்முரை நிறுத்துகின்றார்.

இனி, ஆங்கிலமகனான இன்ஸ் என்பார் ஏஷியாடிக் குவார்டர்லி ரிவியு என்னும் பத்திரிகையில், நம் அபிமான ஆப்தநண்பராயிருந்த ஸ்ரீமத்-பெ-சுந்தரம்பிள்ளையவர்கள் பிரபல வாராய்ச்சிசெய்து கி.-பி ஏழாவது நூற்றாண்டின் றொடக்கத்திலேயாமென்று துணிந்துரை நிறுத்திய ஞான சம்பந்தர் காலத்தை உடன்பட்டு, ஞானசம்பந்தப்பிள்ளை யாராதல் அவரோடுடனிருந்த அப்பமூர்த்திகளாதல் அவர்க்குப் பின்னிருந்த சுந்தரமூர்த்திகளாதல் மாணிக்க வாசகரைத் தம் திருப்பதிகங்களுட் குறிப்பிடாமையானே, மாணிக்கவாசகர் காலம் அச் சைவசமயகுரவர் மூவர்க்கும் பின்னதாதல் துணியப்படுமெனக் கொண்டு போலியாகச் சிலமொழிந்திடு

கின்றார்.

இனி, நம் ஆப்தநண்பராயிருந்த ஸ்ரீமத் பெ சுந்தரம்பிள்ளையவர்கள் ஞானசம்பந்தப்பிள்ளையார் காலநிருணயஞ்செய்து ஆங்கிலமொழியிலெழுதிய மிக அரியதோருரைநூலில் மாணிக்கவாசகர் காலநிருணயம்பற்றி விசேடமாய் ஏதுமெடுத்து மொழிந்ததில்லையாயினும்,

அந்நூன்முகவுரையில் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு முன்னிருந்தாரென்பதன்கண்

நிகழாநிற்கின்றதெனவுரைகுறித்தொழிந்தார்.

6

இனி,

ஐயம்

சரிதவாராய்ச்சியினுட்பமும், அதனையாயு முறையும் அறிய மாட்டாத தமிழ் ஒன்றேவல்லார் சிலர் ஞானசம்பந்தப் பிள்ளையார் நாலாயிர வருடங்கட்கு முன்னிருந்தாரெனவும், மாணிக்கவாசகர் அப்பிள்ளையார்க்கு முன்னிருந்தாரெனவுந் தமக்குத் தோன்றியவாறே கூறி நெகிழ்ந்துபோய் உண்மை காணாது ஒழிவர். இது நிற்க.

இனி மேலே காட்டிய நால்வர் கருத்துக்களும் ஒன்றோ டொன்று பெரிதும் மாறுபட்டு மயங்கிக்கிடத்தலான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/245&oldid=1574666" இலிருந்து மீள்விக்கப்பட்டது