உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட

ஞானசாகரம்

221

அவற்றைப்புடைபட வொற்றி யளந்தாய்ந்து யாம் எம்மறிவில் மெய்யெனக்கண்டவற்றை ஈண்டுத்தந்து காட்டுவாம்.

முதன்மொழிந்த போப்புத்துரை, மாணிக்கவாசகர் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் றொடக்கத்திலே யிருந்தாரெனவும், அவர்க்குப் பின் ஒருநூற்றாண்டு கழிந்து பதினோராவது நூற்றாண்டில் ஞானசம்பந்தப்பிள்ளையார் தோன்றினா ரெனவுஞ் சரிதவரம்பினில்லாது அதனியல்வழுவத்தமக்குத் தோன்றியவாறே பெரிதும் பிழைபடக்கூறினார். சரிதவாராய்ச்சி யின் மிக்குப் புலமை யுடையேமென்று கூறிக்கொள்ளும் ஆங்கிலவமிசத்திற்பிறந்து அவ்வாங்கில மொழிப்புலமையும் பெற்றுள்ள இத்துரைமகனார் தாமங்ஙனங்காலநிருணயஞ் செய்தற்கேற்ற காரணங்கள் நன்கெடுத்து மொழிந்திடா மற்சரிதவியல் பிறழத் தமக்குவேண்டியவாறே கூறியதுபற்றிப் பெரிதும் வியப்படைகின்றோம். சரிதவாராய்ச்சி யின்ன தென்றறியமாட்டாத தமிழ்ப்புலவர் அங்ஙனங் கூறினாராயின், அஃது அவர்க்கிழுக்கன்றாம். அவ்வாராய்ச்சியில் முதிர்ந்த அங்ஙனம் பிறழவுரையாடுவராயின் அதுபற்றி யுலகம் அவரைப்பழியா தொழியுமோ? இதுநிற்க. டாக்டர் ஹூல்ஸ் முதலான ஆங்கிலவித்துவசிகாமணிகளாற் பிரசுரிக்கப்பட்டுவரும்

வுணர்ச்சி யுடை யரான ஆங்கில மக்களே

П

தென்னாட்டுக்கல்வெட்டுப்பட்டையங்களானே, தேவாரத் திருமுறைவகுப்புச் செய்த நம்பியாண்டார் நம்பி.

நம்பியோடொருங்கிருந்த இராசராச அபயகுலசேகர சோழன் அரியணைவீற்றிருப்புப்பெற்றுச் செங்கோலோச்ச உலகுபுரந்தருளத் தொடங்கியவருடம் கி-பி 984ஆம். ஸ்ரீவெங்கையரவர்களும் சென்னைக்கிறிஸ்தவன் கலாசாலைப் பத்திரத்தில் அவ்வரசன் கால மவ்வாறாதல் நியாயப் பிரமாணங்கள் பலகாட்டி மிக நுட்பமாக விரித்துரைத்து நிறுத்தினார். ஸ்ரீமத்-சுந்தரம்பிள்ளையவர்களும் அக்காலவள வையை நன்காராய்ந்துபார்த்து அதுபொருத்தமாவதேயா மன்று ஒருப்பட்டுத் தழுவிக்கொண்டார். பிற ஆங்கில

வித்துவான்களும் அதன்கண் ஐயுறவுகொள்ள இடம்

பெறுகின்றிலர். இங்ஙனமெல்லாரும் ஒருங்கேதழீஇக் கொண்டு நிறுத்திய ராசராசசோழன்காலம் கி-பி பத்தாம் நூற்றாண்டின் இறுதிக்கண்ணதாதல் இனிது விளங்குதலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/246&oldid=1574667" இலிருந்து மீள்விக்கப்பட்டது