உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் - 8 – 8

அவ்வரசன் காலத்தே முறை வகுப்புச்செய்யப்பட்டுப் பெரிதும் பிரசித்தி யுற்றுவழங்கிய தேவாரப்பதிகங்களும் அவற்றை யுலகுய்ய மொழிந்தருளிய குரவரும் அப்பத்தாம் நூற்றாண் டிற்குமுன் நிலவியவாறு மலைவின்றித் துணியற்பாற்று. இனி, அச்சமயகுரவன்மாருள்ளுஞ் சுந்தரமூர்த்திசுவாமிகள் காலம் கி-

பி ஒன்பதாம் நூற்றாண்டின் கட் படற்பாலதென்றுகோடு மாயினும், அச்சுவாமிகளால் திருத்தொண்டத்தொகையில் நன்கெடுத்து மொழிந்திடப்பட்ட திருஞானசம்பந்த சுவாமிகள் காலம் எட்டாம் நூற்றாண்டிலாதல் ஏழாம் நூற்றாண்டிலாதல் கொள்ளற்பாற்றென்பது சொல்லாமலே விளங்கும். இங்ஙனஞ் சொல்லுதற்குப் பெரிதும் வாய்ப்புடைய ஞானசம்பந்தப் பிள்ளையார் காலவளவைகுறித் துரையாட மாட்டாமன் மற்றது பதினோராம் நூற்றாண்டின் கண்ணதாமென்று கூறிய போப்புத்துரை சரித்திரவாராய்ச்சி யின்மிக வல்லர்போலும்! அல்லதூஉம், திருமுகம் வகுத்திட்ட நம்பியாண்டார்நம்பிகளும், அத்திருமுறையினையருளிச் செய்த சமயகுரவரும் அவருள்ளும் சுந்தரர்க்கு முன்னிருந்த பிள்ளை யாரும் எல்லாம் பதினோராம் நூற்றாண்டின் கணிருந்தா ரென்று கோடல்தான் மிக நுணுங்கிய சரிதவாராய்ச்சி போலும்! அம்மம்ம! இங்ஙனம், ஒருதமிழ்ப்புலவர் வாய்பிழைப்பக் கூறினும் அவரைப்பித்த ரென்றெள்ளி நகையாடாநிற்பர். தாமங்ஙனங்கூறின் அது நியாயவுரையாமென்று மகிழ்வர். மேலும், பத்தாம்நூற்றாண் டிலிருந்தாராகப் பெறப்பட்ட நம்பியாண்டார் நம்பிகளுக்குப் பின்றைக் காலமான பதினோராம் நூற்றாண்டிலே ஞான சம்பந்தப்பிள்ளையார் இருந்தாராகக்கூறும் போப்புத்துரையின் மயக்கவுரையினுஞ் சிறப்புடைத்தாவதோர் கயக்கவுரை பிறாண்டுக்கண்டிலம். இனி, அப்போப்புத்துரைமகனார் தாமங்ஙனம் கூறல்வேண்டிற் றென்னையென நுணுகி நோக்கும்வழி, பண்டைக்காலத்தே தமிழ்முதுமக்கள் நாகரிக விருத்திப்பேறு மிகவுடையராய் இலக்கணஇலக்கிய சாத்திர நூன்முறைபோற்றிவந்தாரெனக் கூறுதலானே, அங்ஙனம் பண்டைக் கால நாகரிகவிருத்திப் பேறின்றி இற்றைக்கு நாலைந்து நூற்றாண்டிற்கு முன்னதான நவீனகாலத்தே நூன்முறைபேணுமாறறிந்த ஆங்கிலேயரான தமக்கெல்லாம் இளிவரவுண்டாமெனக்கருதியே அவ்வாறுண் மைச் சரித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/247&oldid=1574668" இலிருந்து மீள்விக்கப்பட்டது