உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

263

களை மேற்கோளாக மொழிந்ததில்லை யெனவும், சரிதமுறை பிறழாத பெரிய புராணமும் ஒரோ விடங்களில் அம்முறை வழுவுகின்ற தெனவும் பிறவுங் கூறாநிற்பர். ஆசிரியர், நச்சினார்க்கினியர்க்கு முன்னிருந்தோரான பேராசிரியர் திருச்சிற்றம்பலக்கோவையா ருரையில் அப்பர்சுவாமிக

ளருளிச்செய்த

“அண்ட மாரிரு ளூடு கடந்தும்ப

ருண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர் கண்டிங் காரறி வாரறி வாரெல்லாம்

வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே”

நண்பருரை

எடுத்து

பொருத்தமின்றா

என்னுந் திருவாக்கை எடுத்துக்காட்டுதலானே உரையாசிரியர் யாருந் தேவாரத் திருவாக்கை மேற்கோளாக மொழிந்திலரென்னும் மாறுணர்க. இனிப் பெரியபுராணம் இவ்விவ்விடங்களிற் சரிதமுறை வழுவுகின்றதென நண்பரவர்கள் தயை செய்து காட்டுவார்களாயின், அதன்மேல் நம்மாராய்ச்சி செறிந்து நிகழும். மற்று நண்பரவர்களியற்றிய உரைநூல் மாணிக்க வாசகர் காலநிருணயஞ் செய்யுமுகத்தானே, சென்னைச் சருவகலா சாலையில் வடமொழிவல்ல பண்டிதராயிருந்த ஸ்ரீசேஷகிரி சாஸ்திரியார் சரித மெய்ம்மைப்பொருள் தேறாது கடைச்சங்க விருப்பை நிராகரித்த போலியுரை களைந்து, அதனிருப்பு உண்மைப் பிரமாணங்கள் பலவற்றான் இனிது நிறுவிய பகுதி மிக்க மேம்பாடுடையது. தமிழ்ப்பண்டைப் பனுவலாராய்ச்சி செய்வார்க்கெல்லாம் நண்பர் திருமலைக் கொழுந்து பிள்ளை யவர்கள் ஆங்கிலமொழியிற் சொற் பொருட்டிறம் விளங்க எழுதிய இவ்வுரைநூல் இன்றியமை யாச் சிறப்பினதாம். இனி, நண்பரவர்கள் பிரமாணமா யெடுத்த அக்கல்லாட் பட்டினத்தடிகள் அருளிச்செய்த அகவற்செய்யு ளமைப்பி னோடு ஒருங்கொத்து ஒழுகு நீரதாய்க் காணப்படுதலின், அது பட்டினத்தார் காலத்திற்குச் சிறிது முன்னாதல் பின்னாதல் எழுதப்பட்டதா மென்னுந் துணிபு கொண்டு போதருகின்றாம். இவ்வாற்றால், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் கண்ணதான அக்கல்லாட நூலையே கருவி யாகக்கொண்டு மாணிக்கவாசகர் கடைச்சங்க நிலைபெற்று விளங்கியஞான் றிருந்தாரெனக் கூறுதல் ஒரு சிறிது மடாதவுரையா மென்ப தினிது பெறப்படும். இது கிடக்க.

நூல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/288&oldid=1574712" இலிருந்து மீள்விக்கப்பட்டது