உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் -8 8

சண்டமாருதம்’ ஸ்ரீலஸ்ரீ, சோமசுந்தரநாயகரவர்களால் அரிய பெரிய மகோபந்நியாசங்கள் இச்சபையின்கண்ணே செய்யப் பட்டன. நாயகரவர்கள் அருமை பெருமைகளை இச்சபையார் என்றும் பாராட்டி வருகின்றார்கள்.

இச்சபையின்கண் நாமும் ஓரவயவியாய் இருக்கும் புண்ணியமுடையோ மாகையால், இதனபிவிர்த்திப்பொருட்டு நன்கொடை யுதவிய யுதவிய சேதுவேந்த சேதுவேந்த ரவர்களின் விதரண மாட்சியை மிக வியந்து அவர்களிடத்து நன்றி பாராட்டுங் கடப்பாடுடைய மாகின்றோம்.

மாணிக்கவாசகர்கால நிருணயம்

2

இ னி இச்சபைக்கென்றே சொந்தக் கட்டிடம் ஒன்று ஏற்பட்டு விட்டமையால் இச்சபையிற் சேர்ந்திருக்கும் சைவ நன்மக்களெல்லாரும் மனவெழுச்சி மேன்மேற் கிளரப் பெற்றுத் தாமியற்கையாகவே நடாத்தி வரும் சிவகைங்கரியங்களைப் பெருக்கி நடப்பித்து வருவார்களென்று நம்புகின்றோம். இன்னும், நாகபட்டினத்தினும் வெளிப்பாளையத்தினும் ச்சபையிற் சம்பந்தமின்றி யிருக்கும் சைவ நன்மக்க ளெல்லாரும் இச்சபையிலொருங்கு சேர்ந்து இச்சபாலயத்தின் கண் தரப்படும் சைவ வமிழ்தத்தை உண்டு பிறவிப் பிணி நீங்கித் திருவருட்பேற்றிற்கு உரியராய்ச் சிவனை வழிபட்டு உய்வார் களாகவென்று திருவருளைச் சிந்திக்கின்றோம்.

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகர் காலநிருணயம்

உரை

அக்கல்லாட நூலையே பெரியதோர் நிலைக்களனாகக் கொண்டு மாணிக்கவாசகர் காலநிருணயஞ் செய்யப் புகுந்த நம் ஆப்தர் திருமலைக்கொழுந்து பிள்ளையவர்கள் வாய்ப்புடையதாமா றில்லை யென்பதூஉம் நுணுகியாராய வல்லார்க் கெல்லாம் நன்றுணரக் கிடக்கும். இன்னுங் கல்லாடநூற் காலநிருணய மென்று தலைக்குறியிட்டு யாமெழுதும் ஆராய்ச்சியுரையில் இவற்றின் பரப்பெல்லாம் நன்கெடுத்துக் காட்டுவாம்; இன்னும் நம் ஆப்தரவர்கள் தாமெழுதிய அவ்வுரை நூலின்கண் மேலே காட்டிய உரை யாசிரியன்மார் யாரும் தம்முரையில் தேவாரத் திருவாக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/287&oldid=1574711" இலிருந்து மீள்விக்கப்பட்டது