உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

261

பலசைவநூலாராய்ச்சியும், கேட்போர்க்கு இனிது விளங்க அரிய பெரிய சைவசித்தாந்த நுட்பங்களை விரித்துரைக்குஞ் சொல்வன்மையும், சைவவேடப்பொலிவும், அவ்வேடப் பொலிவிற்கு ஏற்ற முதுமைப் பருவமும், உலகானுபவ வுணர்ச்சியும் உடையவர்கள். நம் சொல்லளவிலமையாத அருமை பெருமை யுடைய இப்பெரியாரைத் தமது சபைக்கு அக்கிராசனாதிபதியாகப் பெற்றுக்கொண்ட இச்சைவசித்தாந்த சபையார் சிவபுண்ணிய மிகுதியைப் பெரிதும் பாராட்டு கின்றோம். இதற்குக் காரியதரிசியாவார் ம-ள-ள-ஸ்ரீ, வைத்திய லிங்க முதலியாரவர்கள்; இவர்களும் சிவாபிமானமும் இச்சபையினபிவிர்த்தியின் பொருட்டு உழைக்கும் மனவுறுதி யும் மிகவுடையவர்கள்.

இனி இச்சபையில் அவயவிகளாய்ச் சேர்ந்திருக்கும் நன்மக்களெல்லாம் உண்மைச் சிவாபிமானமும் சிவபத்தியு முடையவர்கள். இவர்களுள்ளும், ஸ்ரீமாந், மதுரைநாயகம் பிள்ளையவர்களும், ஸ்ரீமாந், மகாதேவபிள்ளையவர்களும் இச்சபையி னபிவிர்த்தியின் பொருட்டு இரவும் பகலும் அரிது முயன்றுழைத்து அதனை முன்னுக்குக் கொண்டுவந்தவர்கள்; இவர்களுடைய சிவபத்தியும் மனவெழுச்சியும் நாம் பெரிதும் பாராட்டற் பாலனவாம். இதுகிடக்க.

ஒரு

இதுகாறும் ச்சபை நடந்தேறுவதற்கு சிவாபிமானியின் கிருகம் முழுவதும் உபயோகமா யிருந்தது; ஆயினும், சபைக்கென ஒரு சொந்தக்கட்டிட மில்லாமை இதற்கு ஒரு பெருங்குறையாயிருந்தது. இக்குறையை இராம நாதபுர அரசர் ஸ்ரீமாந், பாஸ்கரவேந்தர் நாகபட்டினத் திற்குச் சமீபத்தில் விஜயஞ் செய்த காலையில் உற்று நோக்கி யுணர்ந்து அதனை நீக்கிச் சபைக்கென்றே ஒரு கட்டிடம் உரிமை செய்தற் பொருட்டுச் சபையார்க்கு ஐந்நூறுரூபா அளித்திட்டார்கள். சபையார்கள் மாட்சிமை நிறைந்த சேது மன்னர் நன்கொடையை வந்தனத்தோ டேற்றுச் சபைக்குக் கட்டிடம் உரிமைப்படுத்தி விட்டார்களென்று கேள்வியுற்றுப் பேரானந்த மடைகின்றோம்.

இத்தென்னாடு முழுவதூஉஞ் சைவசித்தாந்த மழை பொழிந்துலாவி எம்போல்வாரையுங் கடைக்கணித்தருளிச் சிவசாயுச்சிய மடைந்த எம்மாசிரியர் 'வைதிக சைவ சித்தாந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/286&oldid=1574710" இலிருந்து மீள்விக்கப்பட்டது