உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

66

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீஜ்ஞாநஸம்பந்தகுருப்போநம

வாழ்த்து

வாழ்க வந்தணா வானவ ரானினம்

வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெ லாமர னாமமே

சூழ்க வையக முந்துயர் தீர்கவே."

17. சைவசித்தாந்த சபை

இது நாகபட்டினத்தைச் சார்ந்த வெளிப்பாளையத்திற் சைவாபிமானம் மிக்குடைய சைவ நன்மக்களால் தாபிக்கப் பட்டு நடைபெறுகின்றது. இதன்கண் நடராசமூர்த்தியின் திருவுருவம் நன்கமைத்து எழுதிய அழகிய படமும், திருஞான சம்பந்தர் முதலிய சைவசமயாசாரியர் திருவுருவப் படங்களும், பிறவும் பிரதிட்டிக்கப்பட்டுத் தினந்தோறும் பூசிக்கப்படு கின்றன. நித்திய நைமித்திக கருமங்களெல்லாம் வழுவாது முறைப்படி நடத்தப்படுகின்றன. வாரந்தோறும் புராண படனம், தேவார திருவாசகம் இசையுடன் ஓதல், சித்தாந்த சைவ நூலாராய்ச்சி முதலியன ஒழுங்காகச் செய்யப்படுகின்றன. வருடோற்சவங்களில் ஆதிசைவர்கட்கும் பிறர்க்கும் ஆடையளித்தல் அன்ன மிடுதன் முதலிய தருமங்களும், விசேட பூசனையும், சித்தாந்தநூற் புலமை நிரம்பிய நல்லாசிரியரைக் கொண்டு அரிய பெரிய உபந்நியாசங்கள் செய்வித்தலும் மேற்கொண்டு மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

இதற்கு அக்கிராசனாதிபதி யாவார் ஸ்ரீமத், சோ. வீரப்ப செட்டியாரவர்கள். இவர்கள் சைவவேளாண் டலைமைக் குலத்துதித்து நற்குண நற்செய்கைகளும் பெருகிய சிவபத்தியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/285&oldid=1574709" இலிருந்து மீள்விக்கப்பட்டது