உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

265

கொண்டாய்' என்னும் வாக்கியக் கூறுகளானே கன்னட நாட்டு வீரசைவ குலத்துதித்த பெரியாரென்பது பெறப்படுதலின், அக்குலநெறி பிழையாது நின்று சிவவழிபாடி யற்றிச் சிவசாயுச்சிய முத்திப்பெரும் பேறுதலைக்கூடிய அவரைச் சித்தாந்த சைவ மரபின்கண் அவதரித்துச் சித்தாந்த சைவத் துறைவழி நின்று இறை பணிபேணிச் சிவசாயுச்சிய முத்திப் பெரும் பேறுதலைக் கூடிய சுந்தரமூர்த்திசுவாமிகள், சித்தாந்த சைவத் துறைவழி நின்று அங்ஙனமே இறைவன் றிருவரு ணெறிதலைக்கூடிய ஏனைச் சித்தாந்த சைவப் பெரியாரைத் தாகுத்தோதுந் தந்திருப்பதி கத்தினுட் கிளந்தெடுத்து கூறுதற்கு அமர்ந்திலராய்ப் ‘பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்' என்பதனாற் குறிப்பாற் கொளவைத்து ஒழிபு கூறியருளினார். மாணிக்கவாசக சுவாமிகள் வீரசைவ குலத்திற்குரியரே யாமென்பது வீரசைவ குலத்தா ரெல்லாரும் அச்சுவாமிகளைத் தமக்குரியராகக் காண்டு பெரிது வழிபாடியற்றி வருதலானும், புதுச்சேரி முதலான விடங்களி லுள்ள வீரசைவ மடாதீனங் களெல்லாம் மாணிக்கவாசகர் பெயர்கொண்டே நிலவுதலானும் இனிது துணியப்படும்.

சிலர்

இப்பெற்றி தேறாத சைவசித்தாந்த நன்மக்களில் ஒரு நடுநிலை திறம்பி மாணிக்கவாசக சுவாமிகளைச் சைவசித்தாந்த மரபின்கண் அவதரித்தவரேயா மெனக் கொண்டு, ஏனைச் சைவ சித்தாந்த குரவன்மார் அவரைத் தந்திருப்பதி கங்களுட் குறிப்பிடாமை யென்னையென்று எதிர் கடாவுவார்க்குச் சவ்வனே இறுக்கலாகாமையின் ஏதேதோ தமக்குத் தோன்றியவா றெல்லாங்கூறிப் பெரிதும் இடர்ப்படு வாராயினார். சமயாதீத நிலையாய் விளங்கு மெய்கண்ட சந்தானச் சித்தாந்த சைவ மரபு பேணும் புண்ணியம் பெரிதுடையோ மாயினும், நடுநிலை பிறழாது உண்மைப் பொருளை யுலகிற்குத் தெளித்தல் வேண்டு மென்னும் மனவுறுதிப்பாடு உடையோ மாகலின், மாணிக்கவாசக சுவாமிகள் சரிதத்தை உண்மை யாராய்ச்சி செய்து, அவ் வாராய்ச்சியில் யாம் மெய்யெனத் துணிந்துகொண்ட பொருட் கூறுபாடு பற்றி அச்சுவாமிகள் வீரசைவ குலத்தின ரேயாமென உலகின்கட் பிரசித்தஞ் செய்யுந் துணிபுடையோ மாயினோம். தனைக் காணும் நம் ஆப்த நண்பர்களான சைவசித்தாந்தச் செல்வர்கள் இதுபற்றி நம்மேற்கதுமென

வெகுட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/290&oldid=1574714" இலிருந்து மீள்விக்கப்பட்டது