உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

லயம் – 8

மறைமலையம்

கொள்ளாது, அதனைப் பொறுமையுடன் ஆய்ந்து பார்த்துத் தம் உண்மைக் கருத்தை யுலகின்கண் வெளிப்படுப் பார்களாக வென்னும் வேண்டு கோளுடையோம்; “எப் பொருள் ளத்தன்மைத் தாயினு மப்பொருண், மெய்ப் பொருள் காண்பதறிவு” என்னுந் திருவாக்குண்மை கடைப்பிடிக்க வல்லார்க்கே யாங்கூறிய உரைவாய்மை நன்கு புலப்படா நிற்கும்.

இனி, மாணிக்கவாசக சுவாமிகள் அங்ஙனம் வீரசைவ குலத்தின்கண் அவதரித்தா ராயினுஞ் சைவசித்தாந்த முடி பொருளுணர்ந்து அப் பொருணெறி வழாதொழுகிச் சிவவழிபாடியற்றிச் சிவமுத்திதலைக் கூடினா ரென்பது அவர் அருளிச்செய்த திருவாசகத் திருமுறையானே நன்கு பெறப் படுதலின், அவர் வீரசைவ குலத்துதித்தாரென்பது பற்றியே ஈண்டைக் காவதோ ரிழுக்கில்லை யென விடுக்க. அற்றேல், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவர் குலவுரிமை கருதாமல் அவரைத் தந்திருப்பதிகத்திற் கிளந்தோத வமையுமாம் பிறவெனின்; அற்றன்று, சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தே மல்கிக்கிடந்த வீரசைவமரபினர் மாணிக்கவாசகரைத் தமக்குரிய குரவராகக் கொண்டு பேணி வழிபட்டு வந்தார்களாதலின் அவர் தம்மைத் தந்திருப்பதிகத் தினுட் கிளந்தோத ஒருப்பட்டிலர். அற்றேல், நம்பியாண்டார் நம்பிகள் தாந் திருமுறை வகுப்புச் செய்தருளிய காலத்துத் திருவாசகத்தை ஏனைக்குரவன்மார் அருளிச்செய்த திருமுறை களோடு ஒருங்கு வைத்து ஒன்பதாந் திருமுறையாக வகுத்தா வாறென்னை யெனின், நம்பியாண்டார் நம்பிகள் காலத்தே வீரசைவ மரபு சுருங்கி வருதலானும், திருவாசகத்தின் கட் காணப்படுஞ் சொன்னயம் பொருணயங் களுஞ் சித்தாந்த சைவக் கோட்பாடுகளும் எல்லாரானும் பெரிது போற்றப் படுதலின் அதன்கட் காணப்படும் வீரசைவப் பொருணுட் பங்கள் உணர்வாரின்மையின் மறைந்து போதலானும், சித்தாந்த சைவரெல்லாருந் தமக்கும் அத் திருவாசக முரியதென்று போற்றுதலானும் அதனை அவ்வாறு ஒன்பதாந் திருமுறை யாகக் கோத்தாரென மறுக்க முற்காலத்து வீரசைவ மரபினர் பெருக்கமுற்றிருந்தா ரென்பதற்குப் பிரபுலிங்கலீலை முதலான நூல்களே சான்றாம். இங்ஙன மாகலின், ஏனைக்குரவன்மார் தந்திருப்பதிகங்களுள் அவரைக் கிளந்தெடுத்து மொழிந் திடாமை கொண்டே அவர் அக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/291&oldid=1574715" இலிருந்து மீள்விக்கப்பட்டது